
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 7. யோகம்
பதிகங்கள்

யோகச் சமயமே யோகம் பலஉன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோகநிர் வாணமே உற்ற பரோதயம்
யோகாபி டேகமே ஒண்சித்தி உற்றலே.
English Meaning:
Stages of Initiation in the Yoga PathSamaya Diksha in yoga is initiation for diverse yoga efforts;
Visesha Diksha in yoga is for achievement of eight-limbed yoga;
Nirvana Diksha in yoga aids yogi glimpse the Divine;
And when he is granted Abhisheka Ordination
Then is he ripe for Siddha State.
Tamil Meaning:
யோக நூல் பற்றி யோக வகைகள் பலவற்றையும் உணர்தல் `யோகத்தில் சரியை` எனப்படும். இயமம் நியமம் முதலிய எட்டுநிலைகளிலும் நிற்றல் `யோகத்தில் கிரியை` எனப்படும். உள்ளொளிக் காட்சி கிடைக்கப் பெற்று நிற்றல். `யோகத்தில் யோகம்` எனப்படும். மூன்றாம் தந்திரத்தில் `பரசித்தி` எனக் கூறப்பட்ட அவற்றைப் பெறுதல் `யோகத்தில் ஞானம்` எனப்படும்.Special Remark:
சரியை முதலியவற்றை அவற்றிற்குரிய தீக்கைப் பெயர் களாற் கூறினார், `யோக நிலையில் அவ் அவ்யோகப் பகுதிகளே அவ்வத் தீக்கைகளாயும் அமையும்` என்றற்கு நிர்வாண தீக்கை ஞான தீக்கையாயினும் சாதகருக்கு ஞானத்தை முதிர்விக்கப் பிராசாத யோகம் உண்மை பற்றி யோகப் பகுதியாகக் கூறினார். அதற்கேற்ப ஞானத்தின் மிக்க ஆசாரிய நிலையையே `ஞானம்` என்றார், வருகின்ற அதிகாரத்து இறுதியிலும் இவ்வாறே கூறுதல் காணத்தக்கது. யோகத்தில் சரியை முதலியன பிறவாறுகூறப்படினும், `இவ்வாறு கூறுதலும் உண்டு` என்பது இதனால் பெறப்படுகின்றது, ``உற்றல்`` என்பதில் றகர ஒற்று விரித்தல்.இதனால், யோகத்தின் படிநிலைகள் பல கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage