
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 7. யோகம்
பதிகங்கள்

விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ னாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்யுணர் வாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்
விரும்பிநின் றேசெயின் விண்ணவ னாகுமே.
English Meaning:
Fruits of YogaDo in devotion practise yoga
You shall a true tapasvin become;
You shall the True Word realize;
And of certain, one with Heavenly Beings be;
Yoga devoted in penance true.
Tamil Meaning:
யோகத்தைத் தியானப் பொருளிடத்து வைக்கும் பேரன்புடன் செய்த வழியே அதனால் விளையத்தக்க பயன்கள் யாவும் விளையும்.Special Remark:
`இல்லையேல், ஒரு பயனும் விளையாது` என்பதாம். நான்கிடத்தும், `செயினே` என ஏகாரத்தை மாற்றியுரைக்க. மெய்த் தவன் - மெய்ப்பொருளைத் தலைப்பட்டு அதுவானவன். இது, `மெய்` என்னும் பெயரடியாகப் பிறந்த வினைப்பெயர். இதன்பின், ``ஆகும்`` என்ற செய்யுமென் முற்று. உயர்திணை ஆண்பாலில் வந்தது. ஈற்றில் வருவதும் அன்னது. இடை நின்ற இரண்டும் `உண்டாகும்` என்னும் பொருளன. விண் - சிவலோகம். ``மெய்த்தவனாகும்`` முதலிய நான்கும் சிறப்புடைப் பொருளை முற்படக் கிளக்கும் முறையிற் கூறப் பட்டன. முதலடியில் `மெய்த்தவராகும்` என்பது பாடமன்று. இரண்டாம் அடியில் `மெய்யுரையாகும்` எனப்பாடம் ஓதி, `குருமொழி கிடைக்கும்` எனவும் பொருளுரைப்பர்.இதனால், `யோகம் பயன் தருதலும் அன்புள்ள வழியே` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage