
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 7. யோகம்
பதிகங்கள்

ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர்
எத்தனை ஆயிரர் வீழ்ந்தனர் எண்ணிலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்தன் இவனென்றே அன்புறு வார்களே.
English Meaning:
Fall and Redemption Through YogaThe monarchs that swayed sceptre righteous,
The devout anchorites in unnumbered thousands,
How many, how many, thy fell below;
(For having wavered in Yoga practice)
And yet, the myriad Siddhas, Devas and Supreme Beings Three,
All redeemed adore Him
Saying ``You, Our Father!``
Tamil Meaning:
யோகத்தில் விருப்பங்கொண்டு, மேற்கூறியவாறு மூலாக்கினியை ஓம்பி நின்றவனைத் தனது பூத உடலை விட்டுப் போவதற்குள், நீதிக்கு ஒத்த செங்கோல் அரசராயும், அமர முனிவ ராயும் உள்ளோர் எத்தனை ஆயிரவர் இறந்தார்கள்! எண்ணில்லாதவர் இறந்தார்கள். அதனால், சித்தர், தேவர், மும்மூர்த்திகள் ஆகியோரும் மேற்கூறிய யோகியை, `இவனே சிவன்` என்று பெருமையாகப் பேசி, அவனிடத்து அன்புடையராவர்.Special Remark:
``விரும்பி நின்றே செயின்`` எனவும் பேணின் எனவும், மேற்போந்த அதிகாரம் அறாது வருதலின், இம்மந்திரமும் அவனது சிறப்புக்கூறுவதேயாய், ``இவன்`` எனப்பட்டவனும் அவனேயாயினான் என்க. `தேவ இருடியர், முனிவர்` என்பார், ``உலப்பிலி மாதவர்`` என்றார். அவர் அவ் இருடியரும், முனிவரும் ஆயது முன்னைப்பசு புண்ணியத்தால் ஆதலின், அப்புண்ணியந் தீர்ந்தவழி அவரும் அப்பதவியின் நீங்குதல் பற்றி, அவரையும் வீழ்வாருள் ஒரு சாராராக ஓதினார். இங்குக் கூறும் யோகம் சிவயோகமாதலின், இவன் இறவாது வீட்டுலகம் புகுவன் என்க. `எண்ணிலி, உலப்பிலி` என்பவற்றை ஓர் எண்ணுப் பெயர்போலவும் வைத்து ஓதுவார் இந்நாயனார்.இதனால், சிவனிடத்துச் செய்யும் அன்போடு கூடிய யோகத்தை உடையவனது பெருமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage