
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 7. யோகம்
பதிகங்கள்

எழுத்தொடு பாடலும் எண்ணெண் கலையும்
பழித்தலைப் பாசப் பிறவியை நீக்கா
அழித்தலைச் சோமனோ டங்கி அருக்கன்
வழித்தலைச் செய்யும் வகைஉணர்ந் தேனே.
English Meaning:
Yoga Shows the WayNeither mantra, nor song, nor arts four and sixty
Ever sunder birth and its accursed bonds;
Then did I take to Yoga`s way,
And lo! I met the Sun, Moon and Fire on the way to Cranium
And they showed the Supreme Way!
Tamil Meaning:
இயல்நூற் கல்வி, பாடல்களை ஓதுதல், மற்றும் அறுபத்து நான்கு கலைகளையும் பயிலல் இவையெல்லாம் இகழ்ச்சிக் குரிய பாசத்தால் விளையும் பிறவியை நீக்கமாட்டா. அதனால், நான் அப்பிறவியை அழிக்கும் முறையை. `சந்திர கலை, சூரிய கலை, அக்கினி கலை` எனப் பெயர்பெறும் மூச்சின் இயக்கங்களை நெறிப்படச் செய்யும் வகையால் அறிந்து கொண்டேன்.Special Remark:
பழித்தலைப் பாசம் - பழியின்கண் நிற்கும் பாசம். `பிறவியும் நீங்கா` என்பது பாடம் அன்று. `அழித்தலை உணர்ந்தேன்` என இயையும். இதற்குமுன், `அதனை` என்பது வருவிக்க. `இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் நாடிவழி இயங்கும் பிராணன் `சந்திர கலை` முதலிய பெயர்களைப் பெறுதல் அறிக. ``வழித்தலை`` என்பதன்பின், `பட` என்பது எஞ்சி நின்றது. `வகையால்` என உருபு விரிக்க. நூலறிவு ஒன்றே பிறவியை நீக்கமாட்டாது; அதற்கு யோக முயற்சி வேண்டும்` என்றதாம்.இதனால், யோகம் பிறவி நீக்கத்திற்கு வழியாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage