
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 7. யோகம்
பதிகங்கள்

யோகிக் கியோகாதி மூன்றுள தொண்டுற்றோற்
காகத் தகுங்கிரியை ஆதி சரியையாம்
தாகத்தை விட்ட சரியைஒன் றாம் ஒன்றுள்
ஆகித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே.
English Meaning:
Sub-divisions in YogaThe yogi has sub-divisions three in his path;
The yoga-kriya that helps him be the yogi;
The yoga-chariya that of desires rids him,
And yoga-in-yoga that centres thought on Sun within;
This latter I fixed my heart on.
Tamil Meaning:
யோக நெறியில் நிற்பவனுக்கு, `யோகம், கிரியை, சரியை` என்னும் மூன்றும் செய்ய உரிமை உண்டு. கிரியை நெறியில் நிற்பவனுக்கு, `கிரியை, சரியை` என்னும் இரண்டும் செய்ய உரிமை உண்டு. உலகியல் அவாவை விட்டுச் சரியையில் நிற்பவனுக்கு அஃது ஒன்றற்குமட்டுமே உரிமை உண்டு. அங்ஙனமாயினும் எந்த ஒன்றில் அன்புடையவனாயினும் அவனது அன்பை நான் விரும்புகின்றேன்.Special Remark:
`சரியை முதலியவற்றுள் எந்த ஒன்றில் நின்றோரும் பின்னர் உலகியலில் வீழாது வீடு பெறுதல் உறுதி` என்பதாம். இம் மந்திரத்துள் திரிவுபட்ட பாடங்கள் பற்றி இடர்ப்பட்டுப் பொரு ளுரைப்பர். ஆதிசரியை - முதற்படியாகிய சரியை. மூன்றாம் அடியில் `சரியையில் ஒன்றேயாம்` என விரிக்க. ஈற்றடியில் ``ஆகி`` என்பது பெயர். அதன்பின் ஒற்றுமிக்கது செய்யுள் விகாரம்.``... ... ... ... ஞானி நாலினுக்கும் உரியன்;
ஊனமிலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன்
யோகி; கிரியா வான்தான் ஒண்கிரியை யாதி
ஆனஇரண் டினுக்குரியன்; சரியையினில் நின்றோன்
அச்சரியைக் கேயுரியன்`` 1
எனச் சிவஞான சித்தியிலும் இவ்வாறே கூறப்படுதல் காண்க.
இதனால், யோகி, `சரியை, கிரியை` என்னும் இரண்டில் நிற்பாரின் உயர்ந்தவனாதல் கூறப்பட்டது. அங்ஙனமாயினும் `அவை பசு புண்ணியங்கள் போல மலத்தின் வழிப்பட்டன ஆகா` என்றற்கு. ``ஒன்றுள் ஆகித்தன் பத்தியுள் அன்புவைத்தேனே`` என்றருளிச் செய்தார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage