
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 12. புவனாபதிச் சக்கரம்
பதிகங்கள்

சேவிப் பதன்முன்னே தேவியைஉத் வாபனத்தால்
பாவித் திதய கமலம் பதிவித்தங்
கியாவர்க்கு மெட்டா இயந்திர ராசனை
நீவைத்துச் சேமி நினைந்த தருமே.
English Meaning:
Pray to Yantra RajaBefore thus serving
Invoke Her within
And place Her firm in the lotus of the heart,
And then pray to Yantra Raja
Who is beyond reach
And hold Him fast within you,
He will grant your wishes all.
Tamil Meaning:
`சேடம்` எனப்படுகின்ற நிவேதப் பொருளைக் கைக்கொள்வதற்குமுன், கும்ப விம்ப சக்கரங்களில் நிறுவப்பட்ட தேவியை ஒடுக்கிக் கொள்ளுதற்குரிய மந்திரம் கிரியை பாவனை களால் இருதயத்தில் ஒடுக்கி, யாவர்க்கும் அணுகுதற்கரிய மேலான இச்சக்கரத்தை நீ வைப்புப்பொருள் போல உள்ளத்திலே மறவாது வை; பின்பு இது நினைத்தவற்றை யெல்லாம் உனக்குக் கொடுக்கும்.Special Remark:
`பராங்முக அர்க்கியத்திற்குப் பின் இதுவும் செய்க` என்றற்கு, `சேவிப்பதன்முன்` என மீட்டுங் கூறினார். உத்வாபனம் - மீட்டுக் கொள்ளுதல். இதனை, `உத்வாகனம்` என்றல் பிழை. இஃது இதற்குரிய மந்திரம் முதலியவற்றைக் குறித்த ஆகுபெயர். \\\"பாவித்து\\\" என்றது, `இருதயத்துள் ஒடுக்கி` என்றவாறு, \\\"இதய கமலம் பதிவித்து\\\" என்றது, பின்னர் மறவாது ஊன்றிக்கொள்ளுதலை. `தேவியைப் பதிவித்து, இயந்திர ராசனைச் சேமி` என்க. \\\"நினைந்த\\\" என்பது அஃறிணைப் பன்மை வினைப்பெயர். `நினைந்தது` என்பது பாடம் ஆகாமை அறிக.இதனால், இச்சக்கர வழிபாட்டினை நிறைவு செய்யும் முறை கூறி முடிக்கப்பட்டது. பலர்க்குப் பயன்படுதல் பற்றி, \\\"இயந்திர ராசன்\\\" எனப்பட்ட இதன் வழிபாட்டில் இதனைக் கூறியதனால், ஏனைச் சக்கரங்களின் வழிபாட்டிற்கும் இஃது உரியதாதல் அறியப் படும்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage