
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 12. புவனாபதிச் சக்கரம்
பதிகங்கள்

செய்ய திருமேனி செம்பட் டுடைதானும்
கையில் படைஅங் குசபாசத் தோடபயம்
மெய்யில் அணிகலன் ரத்தின மாம்மேனி
துய்ய முடியும் அவயவத் தோற்றமே.
English Meaning:
Evoke Bhuvaneswari`s FormHer form, pure red; silky Her robe,
In Her hands are the weapons, goad and noose,
In protective pose She gestures,
On the body are dazzling jewels,
Her body shining as gem purest
And radiant Her crown
Thus adorned, She appears.
Tamil Meaning:
புவனாபதி யம்மைதன் வடிவில் விளங்குவன செம்மை நிறம், செம்பட்டு உடை , கைகளில் அங்குசம், பாசம் என்னும் படைக்கலங்களும், அபய வரதங்களும், அவயங்களில் அவ்வவற் றிற்கு ஏற்ற அணிகலன்கள் தலையில் இரத்தின கிரீடம் என்பவாம்.Special Remark:
\\\"அபயம்\\\" என்றதனால், வரதமும் உடன் கொள்ளப் படும். மெய், அவயவம் இவை ஆகுபெயர்கள். \\\"இரத்தினமாம் மேனி\\\" என்றது \\\"இரத்தினஉருவான` என்றவாறு. தோற்றம் உடைய வற்றை, \\\"தோற்றம்` என்றார்.இதனால், புவனாபதி தியானத்திற்கு அவளது வடிவு கூறப் பட்டது. மேல் பராவித்தை கூறியவிடத்தில் (1158) அம்மைதன் வடிவம் வேறாகக் கூறப்பட்டிருத்தலை நோக்குக.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage