
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 12. புவனாபதிச் சக்கரம்
பதிகங்கள்

ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே
ஆகம் பராவித்தை ஆம் முத்தி சித்தியே
ஏகம் பராசத்தி யாகச் சிவன்உரு
யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே.
English Meaning:
When Siva Becomes Yoga Guru, Parasakti Assumes Eight FormsThe One Parasakti belongs to Lord as His part,
Her Form is Paravidya
She grants Mukti and Siddhi;
Though one the Parasakti is,
When Siva assumes the form of Yoga Guru,
Parasakti has forms eight indeed.
Tamil Meaning:
பராசத்தியாய் உள்ளது ஒன்றே; அதுவே பரசிவத்திற்கு வடிவம். அந்தச் சத்திக்கு வடிவம், `பராவித்தை` எனப்படும் ஷ்ரீவித்தை. அந்த வித்தையால் முத்தி, சித்தி இரண்டும் உளவாம். இனிப் பராசத்தி ஒன்றேயாயினும் சிவன் அங்கியாய் நிற்கச் சத்தி அவனுக்கு அங்கமாய் நிற்றல் உண்மையால், எட்டாய்ப் பிரிந்து நிற்றல் உண்டாகின்றது.Special Remark:
\\\"ஏக பராசத்தி\\\" என்றது உடம்பொடு புணர்த்தல், \\\"அங்கமே\\\" என்னும் ஏகாரம் பிரித்துக் கூறப்பட்டது, எட்டுப் பிரிவாவன; பரை, ஆதி, விந்து, மனோன்மனி, மகேசுவரி, உமை, திருமகள், கலைமகள்` என்னும் நிலைகளாம். `சிவன் அங்கியாகத் தான் அங்கமாதல் உண்மையின்` என்றமையால், `சிவனது சங்கற்பமே இங்ஙனம் பிரிதற்குக் காரணம்` என்பது பெறப்பட்டது.\\\"எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்\\\" 1
என்ற சிவஞானசித்தியை நோக்குக. `சிவன் உருவாம் யோகம் பராசத்திக்கு உண்மையில் எட்டாம` என்க. `சிவகுரு` என்பது பாடம் அன்று. யோகம் - தொடர்பு. `பராசத்தியே ஏனை ஏழுமாம்` என்றற்கு அதனையும் உடன் கூட்டி எண்ணினார்.
இதனால், ஷ்ரீவித்தைக்குரிய தெய்வமாகிய சத்தியது இயல்பு தெளிவிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage