
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 12. புவனாபதிச் சக்கரம்
பதிகங்கள்

சட் கோணந் தன்னில் சிரீம்இரீம் தானிட்டு
அக்கோணம் ஆறின் தலையில்இரீங் காரம்இட்
டெக்கோண முஞ்சூழ் எழில்வட்டம் இட்டுப்பின்
மிக்கீரெட் டக்கரம் அம்முதல் மேல்இடே.
English Meaning:
How to Place the Mantra Letters in the YantraOn the six-angled diagram
Place Srim, Hrim letters.
Above place Rim,
Describe a circle the entire diagram to encompass
And place the letters eight times two, inclusive of Aum.
Tamil Meaning:
மேற்கூறியவாறு வரையப்பட்ட அறுகோணச் சக்கரத்தின் அறைகளில் `ஸ்ரீம், ஹ்ரீம்` என்னும் பீசங்களைப் பொறித்து, அச்சக்கரத்தின் ஆறுமூலைகளின் மேலும், `ஹ்ரீம்` என்னும் பீசத்தை மட்டும் எழுதி, எல்லா மூலைகளும் உள்ளே அடங்கும்படி அவற்றைச் சுற்றி வட்டம் ஒன்று வரைந்து, அவ்வட்டத்திற்கு வெளி யில் திக்கிற்கு ஒன்றாக எட்டுத் தாமரையிதழ் தோன்ற அமைத்து, அவ் இதழ்களின் கீழே வட்டத்தில் வடக்குமுதல், திக்கிற்கு இரண்டாக உயி ரெழுத்துப் பதினாறனையும் அகாரம் முதலாக முறையானே எழுதுக.Special Remark:
\\\"சட்கோணந் தன்னில்\\\" என்ற ஒருமையால், \\\"சட் கோணம்\\\" என்பது ஆகுபெயராய், அவற்றாலாய சக்கரத்தைக் குறித்த தாம். \\\"இட்ட இதழ்கள்\\\" எனப் பின்னர் அனுவதித்துக் கூறலால், அவற்றை இடுதல் இங்குக் கொள்ளப்பட்டது. `மிக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல் பெற்றது. மிகுதல் உயர்தலாதலின், அஃது உயி ரெழுத்தை உணர்த்தி நின்றது. உயிரெழுத்து என்றே கூறினாராயினும், விந்துவொடு கூட்டியே கொள்க. முதலடியில் இனவெதுகை வந்தது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage