
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 12. புவனாபதிச் சக்கரம்
பதிகங்கள்

ஓரில் இதுவே உறையும் இத் தெய்வத்தைத்
தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோணம் மாவின்ப முத்தியும்
தேரில் அறியும் சிவகாயந் தானே.
English Meaning:
Fifteen Letters of the ChakraThe five letters beginning with ``Ka`` are golden hued to behold
The six letters beginning with ``A`` are red-hued
The four letters beginning with ``Sa`` are pure white
The mantras thus grouped lead to bliss below
And to liberation above.
Tamil Meaning:
மாணவகனே, யான் உனக்கு ஒரே முடிவைச் சொல்லுகின்றேன்; கேள்; உண்மையை ஆராயுமிடத்து மேற்கூறிய பதினைந்தெழுத்து மந்திரமே மந்திரங்களில் தலையாயது. இம்மந்திரத் திற்குரிய தேவிதன் பெருமையை ஆராயின் இவளையன்றித் தெய்வம் வேறில்லையாம். இம்மந்திரத்தைக் கொண்ட `ஷ்ரீசக்கரம்` எனப் படுகின்ற முக்கோணச் சக்கரமே பேரின்பமாகிய வீட்டின்பக் கடலாயும் விளங்கும். இன்னும் ஆழ்ந்து நோக்கின், ஷ்ரீசக்கரமே மெய்யுணர்ந்தோர் காணும் சிவன் வடிவாகிய சிதாகாசமாம்.Special Remark:
\\\"யானொன்று செப்பக் கேள்\\\" என்பதை முதலிற் கொள்க. \\\"இதுவே\\\" என்றது, மேற்கூறிய ககாராதி பதினைந்தெழுத்துக் கூடிய மந்திரத்தை, \\\"இத்தெய்வம்\\\" என்றது, `இதன் தெய்வம்\\\" என்றவாறு. பிறிது - பிறிது தெய்வம். வாரி - கடல் `திரிகோணம் மா இன்ப வாரியாம் முத்தியும்` எனக்கூட்டுக. `மனமின்ப` என்பது பாடம் ஆகாமை அறிக.உம்மை, சிறப்பு, காயம் - சரீரம், சிவனுக்குச் சரீரமாவது சிதாகாசமேயாதலை அறிக. `சிதாகாயம்` எனப்பாடம் ஓதினுமாம். திரிகோணங்களால் ஆகின்ற ஷ்ரீசக்கரம் ஆதார ஆதேயம், என்னும் அதிகாரத்தில் காட்டப்பட்டது.
இதனால், மேற்கூறிய மந்திரத்தின் சிறப்பும், அதனோடு தொடர்புடையவற்றது சிறப்பும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage