
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 12. புவனாபதிச் சக்கரம்
பதிகங்கள்

எட்டாகிய சத்தி எட்டாகும் யோகத்துக்
கட்டாகும் நாதாந்தத் தெட்டும் கலப்பித்த (து)
ஒட்டாத விந்துவும் தான்அற் றொழிந்தது
கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.
English Meaning:
The Eight Saktis Reunite in YogaThe eight Saktis belong to the eight-limbed yoga;
When Nadanta is reached,
The eight Saktis mingling one become, (Parasakti)
The Bindu that stood apart disappeared,
These experiences reach not the witless lowly ones.
Tamil Meaning:
பராசத்தி வழிபாடாகிய பராவித்தையால், அச்சத்தி பேதங்களாகிய மேற்கூறிய எட்டும் அட்டாங்க யோகத்தின் வழியே படிநிலைகள் எட்டினையும் அடையச்செய்து, முடிவில் நாதாந்தத்தில் சேர்க்கும். அதன்பின் பரசிவத்தை அடைதற்குத் தடையாய் உள்ள விந்து நாதங்களும் அகன்றொழியும். (ஒழியவே பரசிவத்தைக்கூடிப் பரானந்தம் எய்தலாம்.) இத்தகைய பராவித்தை அறிவாலும், ஆற்றலாலும் கீழ் நிலையில் உள்ளோர்க்கு இயலாததாம்.Special Remark:
கட்டு - நிலை. அவை எட்டாவன; ஆறு ஆதாரம், சகத்திரதாரம், நிராதாரம் என்பன, `யோகத்தால் கட்டாகும் எட்டும் கலப்பித்தது நாதாந்தத்துக் கலப்பித்தது` என்க. `சத்தி யோகத்துக் கலப்பித்தது` எனவே, பராவித்தையைக் கிரியையளவில் மட்டுமின்றி, யோக நிலையில் கொண்டு செய்தவழியே பெரும்பயன் உளதாதல் கூறப்பட்டதாம். `அப்பெரும்பயனும் முத்தியே` என்பார், \\\"ஒட்டாத விந்துவும் தான் அற்றொழிந்தது\\\" என்றார். நாதத்தால் வரும் ஞானத்தை \\\"வைந்தவ ஞானம்\\\" என்றே கூறுவராகலின், `நாதமும் அற்றொழிந்தது` என்னாது, `விந்துவும் அற்றொழிந்தது` என்றார்.\\\"ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல்
சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே\\\" 1
என்னும் சிவஞான சித்தியை இங்கு நினைவு கூர்க.
\\\"ஒழிந்தது\\\" என்பது வினைப்பெயர். அது, \\\"கிட்டா தொழிந்தது\\\" என்பதனோடு முடிந்தது. ஷ்ரீசக்கர வழிபாட்டின் முறையும், பயனும் கூறும்முகத்தால் அதனது சிறப்புணர்த்தி, அது மெலியோர்க்குக் கூடாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage