
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 21. அன்புடைமை
பதிகங்கள்

கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவஎன் றேத்தியும்
அருத்தியுள் ஈசனை ஆரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.
English Meaning:
The Light Refulgent emits beams of purest gold;Plant that deep and firm in heart; raising worship thus,
If you, in yearning song, seek Isan`s Grace,
Then, sure no end be to His blessings copious.
Tamil Meaning:
கருத்தில் ஒளிரும் பொன்னொளியாகிய சிவ பெருமானை உளத்திற்கொண்டும், புறத்தில் வைத்து வணங்கியும், `இறைவனே` என்று துதித்தும், அன்பினால் அவனை அவனது அரிய அருளைத் தருமாறு வேண்டினால், தேவர் தலைவனாகிய அவன் அங்ஙனம் வேண்டுவார்க்கு அவர் விரும்பியவற்றைக் கொடுப்பான்.Special Remark:
`கருத்துறு சோதி` என இயையும். அருத்தி - அன்பு. `அருத்தியுள் நின்று` என ஒரு சொல் வருவிக்க. விருத்தி - வாழ்வு. ``விண்ணவர் கோன்`` என்றது, விண்ணவர் பலரும் தாம் வேண்டிய வாழ்வை அவன்பால் பெற்று நின்றமையைக் குறித்த குறிப்பு என்க.இவை இரண்டு திருமந்திரங்களாலும் சிவபெருமானிடத்து அன்பு செய்யுமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage