
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 21. அன்புடைமை
பதிகங்கள்

தானொரு காலம் சயம்புவென் றேத்தினும்
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
யானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.
English Meaning:
The Lord who sports on His Head honeyed with Kontrai flowers,Who was self-born before the beginning of time
And who abides even after the pralaya
He came to me out of His great compassion.
Tamil Meaning:
வாய்ப்புடைய வழியில் தேன் ஒழுகுகின்ற கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் யான் என்றும் ஒரு பெற்றியனாகும்படி எனது அன்பில் நிலை பெற்றுள்ளான். அவன் பிறர் தன்னை ஒருமுறை ஒருபெயரால் துதிப்பினும் அத்துதி பழுதுபடாத வாறு என்றேனும் ஒருநாள் வான்வழித் துணையாய் நின்றருளுவான்.Special Remark:
சயம்பு - சுயம்பு; தானே தோன்றியவன். வான் வழி - உயர்நெறி. சிவலோக நெறியுமாம். சடையிற் புனைதலால் தேன் ஏற்கும் வழியால் ஒழுகுதல் வேண்டிற்று. `தேன், உமாதேவி` என்பாரும் உளர். `ஒருவண்ணம் ஆக` என ஆக்கம் வருவிக்க. `தானொருவண்ணம்` என்னும் பாடமே பதிப்புக்களில் காணப் படுகின்றது.இவ்விரண்டு திருமந்திரங்களானும் சிவனிடத்துச் செய்யும் அன்பின் சிறப்பு வகுத்துக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage