
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 21. அன்புடைமை
பதிகங்கள்

ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறிகொடு கொங்குபுக் காரே.
English Meaning:
They, of intense love, Hara surely see,They, of the compassionate heart, see the Holy Feet to praise;
The world-burdened see only life`s revolving wheel,
And, in horror`s mazes lost, enter Hell`s trackless ways.
Tamil Meaning:
சிவபெருமானிடத்துப் பேரன்பு உள்ளவரே அவனை முற்றப் பெறுவர். சிறிது அன்பு உடையவர் அவனது அருளைப் பெறுவர். அன்பே இல்லாது குடும்ப பாரத்தை உடைய வராய் இருப்பவர் பிறவிக் கடலையே காண்பவராய், கொடுமை நிறைந்த வழியிற்சென்று, கொங்குநாட்டை அடைந்தவர்போல் ஆவர்.Special Remark:
கொங்குநாட்டை இடர்மிகுந்த நாடு என்பர். ``கொங்கே புகினும் கூறைகொண் டாறலைப் பார்இலை`` (தி.7 ப.92 பா.3) என்ற நம்பியாரூரர் வாக்கைக் காண்க.இதனால் அன்புடையார் பெறும் பயனும், அன்பிலாதார் எய்தும் துன்பமும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage