ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில்
    ஆம்பதம் எட்டாக இட்டிடின் மேலதாக்
    காண்பதம் தத்துவம் நால்உள் நயனமும்
    நாம்பதம் கண்டபின் நாடறிந் தோமே.
  • 2. நாடறி மண்டலம் நல்லஇக் குண்டத்துள்
    கோடற வீதி கொணர்ந்துள் இரண்டழி
    பாடறி பத்துடன் ஆறு நெடுவீதி
    ஈடற நாலைந் திடவகை ஆமே.
  • 3. நாலைந் திடவகை உள்ளதோர் மண்டலம்
    நாலுநல் வீதியுள் நந்நால் இலிங்கமா
    நாலுநற் கோணமும் நண்ணால் இலிங்கமா
    நாலுநற் பூநடு நண்ணல்அவ் வாறே.
  • 4. ஆறிரு பத்துநால் அஞ்செழுத் தஞ்சையும்
    வேறுரு வாக விளைந்து கிடந்தது
    தேறிநீர் உம்மில் சிவாய நமஎன்று
    கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே.
  • 5. குறைவதும் இல்லை குரைகழல் கூடும்
    அறைவதும் ஆரணம் அவ்வெழுத் தாகில்
    திறம்அது வாகத் தெளியவல் லாருக்
    கிறவில்லை என்றென் றியம்பினர் காண.
  • 6. காணும் பொருளும் கருதிய தெய்வமும்
    பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
    ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக்
    காணுங் கனகமும் காரிகை யாமே.
  • 7. ஆமே எழுத்தஞ்சும் ஆம்வழி யேஆகப்
    போமே அதுதானும்? போம்வழி யேபோனால்
    நாமே நினைத்தன செய்யலும் ஆகும்
    பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.
  • 8. பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
    நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்
    வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
    தகையில்லை தானும் சலமது வாமே.
  • 9. ஆரும் உரைசெய்ய லாம்அஞ் செழுத்தாலே
    ஆரும் அறியாத ஆனந்த ரூபம்ஆம்
    பாரும் விசும்பும் பகலும் மதியதில்
    ஊரும் உயிரும் உணர்வது மாமே.