
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 11. சாம்பவி மண்டலச் சக்கரம்
பதிகங்கள்

சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக இட்டிடின் மேலதாக்
காண்பதம் தத்துவம் நால்உள் நயனமும்
நாம்பதம் கண்டபின் நாடறிந் தோமே.
English Meaning:
How to Form ItTo speak of Sambhavi Mandala Chakra
It is like this;
Form Chambers eight,
Within it is the Chamber Central
That verily is the Eye of Tattvas Four
(Sivam, Sakti, Nadam and Bindu)
When we see this Holy State revealed,
We verily know Worlds all.
Tamil Meaning:
`சாம்பவி மண்டலம்` என்னும் பெயரினதாகிய சக்கரத்தின் அமைப்பினை யாம் சொல்லின், வரிசைக்கு எட்டு அறைகளாக எட்டு வரிசையில் அறுபத்து நான்கு அறைகளைக் கீறி, அவற்றின் நடுவில் நான்கு அறைகளை, `சிவம், சத்தி, நாதம், விந்து` என்னும் நான்கும் அருவத் திருமேனிகளாகக் கருதி, அவற்றையே அச்சக்கரத்தின் கண்களாக வைத்து, அனைத்தையும் முற்ற நோக்குதல் வேண்டும். அப்பொழுதே அச்சக்கர வழிபாட்டினை நாம் அறிந்தவராவோம்.Special Remark:
`மண்டலம், சக்கரம்` என்பன ஒருபொருட் சொற் களாதலின், `சாம்பவி மண்டலச் சக்கரம்` என்பது இருபெயரொட்டு. `இட்டிடின் காண்பதம்` என இயையும். மேல் என்றது இரட்டுற மொழிதலாய், உள்ளிடத்தையும், மேலிடத்தையும் உணர்த்தி, இரண்டாவது பொருளில் `தத்துவம்` என்பதனோடு இயைய, \\\"நால்\\\" என்பது காண்பதம் என்பதனோடும் சென்றியைந்தது. தத்துவம் நாலாக என ஆக்கம் வருவிக்க. `உள்ளே நயனமும் கண்டு` எனக் காணுதலை நயனத்திற்குங் கொள்க. நாடு - நாடுதல்; வழிபடுதல்; முதனிலைத் தொழிற்பெயர்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage