
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 11. சாம்பவி மண்டலச் சக்கரம்
பதிகங்கள்

பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானும் சலமது வாமே.
English Meaning:
Proceed the Way of Five LettersThe Five Holy letters yours shall be
Persevere their Way,
If you so proceed,
You shall achieve all you wish
None the enemies,
In the World here below.
Tamil Meaning:
திருவைந்தெழுத்தை ஓதுபவரிடத்தில் பகை, பெரியோர் இகழும் இகழ்ச்சி, இருவினை, பொருந்தாச் செயல்கள், இடையூறு என்பவை இல்லையாம். நாள்தோறும் நன்மைகளே விளையும். அம்மந்திரமே மலத்தை முற்றக் கழுவித் தூய்மையைத் தரும் நீராம்.Special Remark:
பணிந்தவர் - பணியப்பட்டவர். `தம்மால்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். \\\"நாணாளும் நன்மைகள் ஆகும்\\\" என்பதை, \\\"தகையில்லை\\\" என்பதன்பின் கூட்டி உரைக்க. மூன்றாம் அடி உயிரெதுகை.இவை இரண்டு மந்திரங்களாலும், `முத்தியைத் தருவதாகிய திருவைந்தெழுத்து மந்திரத்தைப் போகம் வேண்டுவார் கணித்தல் பொருந்துமோ` எனப் பேரறிவில்லாதார்க்கு இச்சக்கரம் பற்றி எழும் ஐயம், `திருவைந்தெழுத்து எல்லாவற்றையும் தரும்` எனக் கூறி நீக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage