ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஓதின் மயிர்க்கால் தொறும்அமு தூறிய
    பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
    ஆதி சொரூபங்கள் மூன்றகன் றப்பாலை
    வேதம தோதும் சொரூபிதன் மேன்மையே.
  • 2. உணர்வும் அவனே உயிரும் அவனே
    புணர்வும் அவனே புலவி அவனே
    இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான்
    துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.
  • 3. துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரு
    முன்னி யவர்தம் குறையை முடித்திடும்
    மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
    சென்னியுள் நின்றதோர் தேற்றத்த னாமே.
  • 4. மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
    தன்னுற்ற சோதித் தலைவன் இணையிலி
    பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்
    என்னுற் றறிவானான் என்விழித் தானே.
  • 5. சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம்
    சித்தத்தில் நில்லாச் சிவானந்தப் பேரொளி
    சுத்தப் பிரம துரியம் துரியத்துள்
    உய்த்தல் துரியத் துறுபே ரொளியே.
  • 6. பரனல்லன் நீடும் பராபரன் அல்லன்
    உரனல்லன் மீதுணர் ஒண்சுடர் அல்லன்
    தரனல்லன் தான்அவை யாய்அல்ல ஆகும்
    அரனல்லன் ஆனந்தத் தப்புறத் தானே.
  • 7. முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
    பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
    சத்தியுள் நின்(று) ஓர்க்கும் தத்துவம் கூடலால்
    சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே.
  • 8. துரிய அதீதமும் சொல்லறும் பாழாம்
    அரிய துரியம் அதீதம் புரியில்
    விரியும் குவியும் விள் ளாமிளி ரும்தன்
    உருவும் திரியும் உரைப்பதெவ் வாறே.