
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 22. சிவ தரிசனம்
பதிகங்கள்

மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன்னுற்ற சோதித் தலைவன் இணையிலி
பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்
என்னுற் றறிவானான் என்விழித் தானே.
English Meaning:
He Blessed Me Saying, ``You Know``My thoughts woke up
In lightning flash within;
And as I woke up,
The self-illumined Lord, the peerless One,
Of Form golden-hued, Nandi of matted locks
Entered into me and said, ``You know;``
And thus saying,
He cast His benign glance upon me.
Tamil Meaning:
மின்னல் மின்னினாற்போலத் திடீரெனத் தோன்றி மறைந்த ஓர் ஒளியால் மூடிக்கிடந்த எனது அறிவாகிய கண்ணைத் திறந்தேன். திறந்தவுடன் சிவன் அக்கண்ணில் என் அறிவினுள்ளே அறிவாய் விளங்கினான்.Special Remark:
இடையிரண்டு அடிகள் சிவனது இயல்பைக் குறித்து நின்றன. எனவே, ``தலைவன், இணையிலி, நந்தி`` என்பன ஒரு பொருள்மேற் பல பெயராய் வந்தனவாம். தன் உற்ற சோதி - தன்னை இயல்பாகவே பற்றியுள்ள ஒளி; அஃது அறிவேயாம். அந்த அறிவாகிய ஒளியே மின்னல்போலத் தோன்றி மறைந்தது. அஃதாவது, `சத்தி நிபாதம். முதற்கண் ஆன்ம அறிவில் ஓர் அதிர்ச்சி உண்டாகும் படி தோன்றிப் பின் மெல்ல முதிர்ந்தது` என்பதும், `அதனால் எனது அறிவு சிவத்தை அறியும் நிலையைப்பெற்றது` என்பதும், அதனைப் பெற்றபின் சிவன் அறிவினுள் அறிவாய் விளங்கினான்` என்பதும் கருத்து. அறிவினுள் அறிவே சிவஞானம். `விழிக்கண்` என ஏழாவது விரிக்க. அறிவு, ``சிந்தை`` எனப்பட்டது. `சிந்தையை விழித்தேன்` என்க. ``விழித்தேன்`` என்றது குறிப்புருவகம்.இதனால், சத்தி நிபாதத்தில் திருவருள் மிக்கு விளங்க, அதனாலே பெற்ற சிவ தரிசனத்தை எய்துதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage