
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 22. சிவ தரிசனம்
பதிகங்கள்

முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்(று) ஓர்க்கும் தத்துவம் கூடலால்
சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே.
English Meaning:
Aim of Suddha StateMukti, Siddhi and mature Jnana attained,
In devotion standing,
In Param standing,
In the mighty Sakti standing
They realize the Tattvas;
Then from that Suddha State
They passes to Sukhananda Bodha State.
Tamil Meaning:
`வீடு பேறு` என்பதில் வீடு - விடுதல். பேறு - பெறுதல். விடுதல் பாசத்தை; பெறுதல் பதியை. வீடும், பேறுமே இங்கு ``முத்தியும், சித்தியும்`` என ஓதப்பட்டன. முற்றிய ஞானத்தோன் - இவ்விரண்டன் இயல்புகளையும் முற்றும் உணர்ந்தவனே நிறை ஞானி -யாவான். ``இருமை வகைதெரிந்து ஈண்டும் அறம் பூண்டார்``3 என்றார் திருவள்ளுவரும். இத்தகையோன் தனது ஞாநத்தின் பயனாகச் சிவனிடத்தில் பேரன்பு செய்து, அதனானே அவனது பெருங்குணமாகிய பேரானந்தத்தில் திளைத்து, அவ்வாற்றால் சிவத்துள் அடங்கி, அதனானே அறிவர் யாவரும் ஆராய்கின்ற மெய்ப்பொருளைத் ``தலைப்படுதலால், சகலத்தில் சுத்தாவத்தை யாகிய சிவானந்தத்தை அடைந்த ஞானியர் ஆவர்.Special Remark:
``மா சத்தியுள் நின்று`` என்பதை, பரந்தன்னுள் நின்று`` என்பதற்கு முன்னே கூட்டுக. ஓர்த்தல் - ஆராய்தல். தத்துவம் - மெய்ப் பொருள். ``சுத்தி`` என்றது சகலத்திற் சுத்தத்தை. ``அகன்றோர் போதர்`` என்பது வேறு முடிபாகலின், ஒருமை பன்மை மயக்கம் இன்று.இதனால், நின்மலாவத்தையைக் கடந்து பராவத்தையை எய்தினோர் அந்நிலையினின்றும் ஒரோ ஒருகால் இறங்கினும் சிவயோக நிலையினின்றும் தாழார்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage