
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 22. சிவ தரிசனம்
பதிகங்கள்

துரிய அதீதமும் சொல்லறும் பாழாம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள் ளாமிளி ரும்தன்
உருவும் திரியும் உரைப்பதெவ் வாறே.
English Meaning:
Ariya-Turiyatita Beyond; Turiyatita Beyond SvarupaTuriyatita is Void
That is beyond words;
When Ariya Turiyatita state still above is reached,
Jiva blossoms shimmering;
Neither folding, nor unfolding;
The Form too is altered;
How to describe it!
Tamil Meaning:
எவ்வகை அவத்தையிலும் `துரியாதீதம்` என்பது உயிர் தன்னை மறந்திருக்கும் நிலையாகும். ஆகவே, நின்மலா வத்தைத் துரிய துரியாதீதங்களே யாயினும் அந்நிலைகளை அடைந்த ஆன்மா புறத்துச் செல்லுதல், அகத்தில் மீளுதல், பொருள்களை நோக்கி ஓடுதல் என்பனவாகிய தனது இயல்பு அனைத்தினும் நீங்கி நிற்கும் என்றால், அவ்வான்மாவை முன்னது போல வைத்து, `சீவன்` என்று சொல்வது எங்ஙனம்?Special Remark:
`கூடாது` சிவம் என்றே சொல்லுதல் வேண்டும்` என்பதாம். முன் மந்திரத்தில் ``சுத்தி`` நின்மலாவத்தை இடம் பெற்றமையால் இங்கு, ``துரிய அதீதம், துரியம்`` எனப்பட்ட நின்மலாவத்தைய ஆயின. புரிதலுக்கு, `ஆன்மா` என்னும் எழுவாய் வருவிக்க. விள்ளா - விள்ளாது; இடைவிடாமல் மிளிர்தல். இங்கு அறிவு செல்லுதல். ``விரியும்`` என்பது முதலிய `செய்யும்` என்னும் எச்சங்கள் மூன்றும் அடுக்கி, ``உரு`` என்னும் ஒரு பெயர் கொண்டன. `உரு` என்றது இயல்பை. திரிதல் - வேறுபடுதல்; நீங்குதல். ``உரைப்பது`` என்பது தொழிற்பெயர். `முன்னது போல` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.பராவத்தையை எய்தினோர் சீவத் தன்மை எய்தாமைக்கு நின்மல துரியாதீதங்களை எடுத்துக் காட்டினார்.
இதனால், சொரூப சிவனை எய்தினோர் சீவத் தன்மை எய்தாமை உவமை முகத்தால் வலியுறுத்தி முடிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage