ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. மேவிய சற்புத் திரமார்க்க மெய்த்தொழில்
    தாவிப்ப தாம் சக மார்க்கம் சகத்தொழில்
    ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத்
    தேவியோ டொன்றல் சன் மார்க்கந் தெளிவதே.
  • 2. பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
    ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
    நேசித்திட் டன்னமும் நீர்சுத்தி செய்தல்மற்
    றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.
  • 3. அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும்
    மறுகா நரைஅன்னம் தாமரை நீலம்
    குறுகா நறுமலர் கொய்வன கண்டும்
    சிறுகால் அரன்நெறி சேரகி லாரே.
  • 4. அருங்கரை யாவ தரனடி நீழல்
    பெருங்கரை யாவது பிஞ்ஞகன் ஆணை
    வருங்கரை ஏகின்ற மன்னுயிர்க் கெல்லாம்
    ஒருங்கரை யாய்உல கேழின் ஒத்தானே.
  • 5. உயர்ந்தும் பணிந்தும் உகந்தும் தழுவி
    வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின்
    பயந்தும் பிறவிப் பயன்அது வாகும்
    பயந்து பரிக்கிலர் பால்நவை யாமே.
  • 6. நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்றன்னை
    என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியை
    துன்றுமலர் தூவித் தொழுமின் தொழுந்தொறுஞ்
    சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.
  • 7. திருமன்னும் சற்புத்திர மார்க்கச் சரிதை
    உருமன்னி வாழும் உலகத்தீர் கேண்மின்
    கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது
    இரும்மன்னும் நாடோறும் இன்புற் றிருந்தே.