
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 11. சற்புத்திர மார்க்கம்
பதிகங்கள்

அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும்
மறுகா நரைஅன்னம் தாமரை நீலம்
குறுகா நறுமலர் கொய்வன கண்டும்
சிறுகால் அரன்நெறி சேரகி லாரே.
English Meaning:
All Nature Seeks Flowers: Why Not You?The humming bees roam unceasing from flower to flower;
The snow-white swans float amidst lotus and blue-bells,
They all, all, seek flowers fragrant;
Yet, you who have beheld all this,
Adore not the Lord with flowers for a while even.
Tamil Meaning:
`அறுகாற் பறவை` எனப்படுகின்ற வண்டுகள் தேன் உள்ள மலர்களையே தேடித் திரியும்; வெறும் மலர்களை அணுக மாட்டா. வெண்ணிறத்தையுடைய அன்னப் பறவைகள் தாமரை மலரையே விரும்பியடையும்; நீலப் பூவை அடையமாட்டா. அவை போலச் சிவ வழிபாடு செய்வோர் சிவனுக்கு உவப்பாகின்ற நல்ல மலர்களையே பறிப்பர்; பிற மலர்களைப் பறியார். இவற்றையெல்லாம் நேரிற் கண்டும் நல்லறிவில்லாதார் இளமைக்காலத்திற்றானே சிவனை வழிபட்டு சிவபுத்திரராய் விளங்கும் வழியை அறிகின்றிலர்.Special Remark:
``அலர்`` என்பது, இசையெச்சத்தால், `தேன் நிறைந்த மலர்` எனப்பொருள் தந்தது. `அன்னம் தாமரையைக் கண்டு மறுகா; நீலம் குறுகா` எனக் கூட்டுக. மறுகுதல் - வருந்துதல்; வெறுத்தல். அஃது இன்மை விரும்புதலை உணர்த்திற்று. ``அரன் நெறி சேரகிலார்`` எனப் பின் வருதலின், நறுமலர் கொய்வார் அந்நெறியைச் சேர்ந்தோராதல் அறியப்படும். ``சிறுகால்`` என்பது `முன் நேரம்` எனப் பொருள் தந்து இளமைப் பருவத்தைக் குறிக்கும்.``கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேங்கால் துயராண் டுழவார்`` 1
என்பதனானும் அறிக. `சிவ புத்திரராதற்கு இளமைப் பருவம் மிக ஏற்புடைத்து` என்றற்கு, `சிறுகால் சேரகிலார்`` என்றார்.
``முன்னடைந்தான் சம்பந்தன்`` 2 என ஞான சம்பந்தர் தாமே அருளியவாறும், சேய்ஞலூர் பிள்ளையாரும் அங்ஙனமே ஆயின வாறும், ``முன் இளங் காலத்திலே பற்றினேன்`` 3 எனப்பிறரும் அருளியவாறும் இங்கு நினைவு கூரத்தக்கன.
இதனால், கிரியை இளமைக் காலத்தேயும் கொள்ளத் தக்கதாய்ச் சற்புத்திர மார்க்கமாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage