
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்
- எட்டாம் தந்திரம் - 2. உடல் விடல்
- எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
- எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை
- எட்டாம் தந்திரம் - 5. அத்துவாக்கள்
- எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
- எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
- எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
- எட்டாம் தந்திரம் - 9. முக்குண நிர்க்குணங்கள்
- எட்டாம் தந்திரம் - 10. அண்டாதி பேதம்
- எட்டாம் தந்திரம் - 11. பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல்
- எட்டாம் தந்திரம் - 12. கலவு செலவுகள்
- எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
- எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்
- எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்
- எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை
- எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்
- எட்டாம் தந்திரம் - 18. முக்குற்றம்
- எட்டாம் தந்திரம் - 19. முப்பதம்
- எட்டாம் தந்திரம் - 20. முப்பரம்
- எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்
- எட்டாம் தந்திரம் - 22. முத்துரியம்
- எட்டாம் தந்திரம் - 23. மும்முத்தி
- எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம்
- எட்டாம் தந்திரம் - 25. முக்கரணம்
- எட்டாம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி
- எட்டாம் தந்திரம் - 27. முப்பாழ்
- எட்டாம் தந்திரம் - 28. காரிய காரண உபாதி
- எட்டாம் தந்திரம் - 29. உபசாந்தம்
- எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை
- எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை
- எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி
- எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம
- எட்டாம் தந்திரம் - 34. மோட்ச நிந்தை
- எட்டாம் தந்திரம் - 35. இலக்கணாத் திரயம்
- எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்
- எட்டாம் தந்திரம் - 37. விசுவக் கிராசம்
- எட்டாம் தந்திரம் - 38. வாய்மை
- எட்டாம் தந்திரம் - 39. ஞானிகள் செயல்
- எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல்
- எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை
- எட்டாம் தந்திரம் - 42. முத்தியுடைமை
- எட்டாம் தந்திரம் - 43. சோதனை
Paadal
-
1. ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்
தாறிய ஞானம் சிவோகம் அடைந்திட்டு
வேறுமென் மேல்முச் சொரூபத்து வீடுற்றங்(கு)
ஈறதில் பண்டைப் பரன்உண்மை எய்துமே.
-
2. மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பதோ ராறு முதிர்வுள
மூன்றினினி னுள்ளே முளைத்தெழும் சோதியைக்
காண்டலும் காயக் கணக்கற்ற வாறே.
-
3. உலகம் புடைபெயர்ந்(து) ஊழியும் போன
நிலவும் சுடரொளி மூன்றும்ஒன் றாய
பலவும் பரிசோடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆர்அறி வாரே.
-
4. பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்(து)
அருவாய் உருவாய் அருவுரு வாகிக்
குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை
உருவாய் உடன்இருந்(து) ஒன்றாய் அன் றாமே. -
5. மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து
அணியென லாய்நின்ற ஆறது போலத்
தணிமுச் சொருபாதி சத்தியால் சாரப்
பணிவித்த பேர்நந்தி பாதம்பற் றாயே.
-
6. கல்லொளி மாநிறம் சோபைக் கதிர்தட்டல்
நல்ல மணிஒன்றில் நாடில்ஒண் முப்பதம்
சொல்லறு பாழில் சொல்லறு பேர்உரைத்(து)
அல்லறு முத்திராந் தத்தனு பூதியே.
-
7. உடந்தசெந் தாமரை யுள்ளுறு சோதி
நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால்
அடைந்த பயோதரி அட்டி அடைத்த
இடந்தரு வாசலை மேல்திற வீரே.