
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம்
பதிகங்கள்

மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பதோ ராறு முதிர்வுள
மூன்றினினி னுள்ளே முளைத்தெழும் சோதியைக்
காண்டலும் காயக் கணக்கற்ற வாறே.
English Meaning:
Light in the Three MansionsThree the Mansions
Three that reside there
In the Three merge the thirty-six (Tattvas)
The Light that rises from within the Three
May well the Jiva vision;
Then ended will birth`s cycle be
That endless was.
Tamil Meaning:
`சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர்` என்னும் மூவகை உயிர்களுக்கும் மூன்றுவகையான மாளிகை போன்ற, `பிராகிருத சரீரம், மாயேய சரீரம், வைந்தவ சரீரம்` என்னும் மூன்று வகையான உடம்புகள் இருப்பிடமாய் உள்ளன. அந்த மூன்று வகை உடம்புகட்குள்ளேதான் தத்துவங்களும் உள்ளன. அவ்வுடம்புகளில் ஒவ்வொன்றிலுமே `ஆன்மா,சிவம், பரம்` என்னும் மூன்று ஒளிப்பொருள்களும் வெளிப்படுகின்றன. அவ்வொளிகளை நேரே உணரும் வாய்ப்பு உளதாயின், அதன்பின் மேற்கூறிய உடம்புகளுக் குள்ளே உயிர் இருக்க வேண்டிய விதி இல்லையாய்விடும்.Special Remark:
``மாளிகை மூவர்`` என்பன உருவகங்கள். `மூவர் இருப்பிடமாக மாளிகை மூன்று உளர்`` என இயைக்க. முதிர்பு - வலுவடைதல். அஃதாவது உடம்பு அழிந்தாலும் தாம் அழியா திருத்தல். அத்தன்மை யுடையனவே தத்துவங்களாம் ``மூன்றினின் என்பதில் இன், வேண்டாவழிச் சாரியை, சோதி - ஒளி; என்றது அறிவை. காண்டல் ஆன்ம, சிவ, பர தரிசனம் செய்தலாம். தடத்த சிவத்தையே `சிவம்` என்றும், சொரூப சிவத்தைப், `பரம்` என்றும் நாயனார் இவ்விடங்களில் குறித்தருளுகின்றார். ``மூன்றுஎன்பதைச் சோதிக்கும் கூட்டி, `மூன்று சோதியை`` என உரைக்க. பரம் உடம்பினுள்ளே முளைத்தெழுதலாவது, `ஞான நிலையாகிய நின்மல நிலைக்குமேல் பர நிலையில் அடையப்படும் ஞேயப்பொருள் உண்டு என்னும் உணர்வு தோன்றுதல். கணக்கு - கட்டளை, விதி. காயக் கணக்கு அறுதல் பிறப்பு அறுதலாம். பயனை, ``ஆறு`` என்றார், ``அறத்து ஆறு இது என வேண்டா``l என்பதிற்போல. ``ஆறு`` என்பதன் பின், `உண்டாம்` என்னும் பொருட்டாகிய, `ஆம்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. ஈற்றடி இன எதுகை பெற்றது.இதனால், முச்சொரூபங்களையும் மூவகை உயிர்களும் தம் தம் உடம்பிற்றானே உணர்ந்து அடைதற்குரியன என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage