
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம்
பதிகங்கள்

உடந்தசெந் தாமரை யுள்ளுறு சோதி
நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால்
அடைந்த பயோதரி அட்டி அடைத்த
இடந்தரு வாசலை மேல்திற வீரே.
English Meaning:
Kundalini YogaHe is the Light within the heart`s crimson lotus;
If the Crimson Lotus within, Nada you reached,
You shall wake Kundalini Sakti;
And closing Muladhara where She imprisoned is,
Ascend upward (through Sushumna in Yogic breathing)
And open wide the gate above at cranium top.
Tamil Meaning:
வரிசையாய் அமைந்துள்ள செந்தாமரை மலர்களின் பல்வேறு வகையாய்க் காட்சியளிக்கின்ற இறைவனை மூலாதாரத்தி னின்றும் எழுந்து மேல்நோக்கி நடக்கின்ற அனல் நாதாந்தத்திலே நிறுத்திக்காட்ட, அதனால், அவ்விடத்தை அடைந்த பால் ஒழுகும் தனங்களையுடைய பெருமாட்டி அடைத்து வைத்திருக்கின்ற விசாலமான மேல் வாசலைத் திறக்கும் உபாயம் அறிந்து திறவுங்கள்.Special Remark:
`அப்பொழுது அவ்வத் தாமரை அளவில் அடங்கித் தோன்றிய இறைவன், எல்லையில் பேரொளியாய்க் காட்சி யளிப்பான்` என்பது குறிப்பெச்சம். `அக்காட்சி சிவ சொரூபக் காட்சி யாகும்` என்பதும், அதனைக் கண்டால் பர சொரூபத்தைக் காணுதல் கூடும் என்பதும் இதன் உட்கருத்துக்களாகும்.ஒன்றையொன்று சார்ந்திருப்பதை, உடந்தையாய் இருப்பது, என்றல் வழக்கு. `உடந்தை` என்பது உடந்த` என நின்றது. ஒற்று மிகாமையும் இத்திரிபு நோக்கியேயாம் பின் வந்த `செந்தாமரை` என்பது அது போலும் தீயைக் குறித்தது உடந்த செந்தாமரை ஆறு ஆதாரங்கள். தீ, மூலாக்கினி. `நாதத்தில் தகைந்தால்` என்க. தகைதல் - தடுத்தல். `தகைந்ததால்` என்பது குறைந்து நின்றது. `சோதியைத் தகைந்ததால்` என இயைக்க. பயோதரி, குண்டலி, சத்தி, அட்டி அடைத்தல் இறுக மூடிவைத்தல் மேல் வாசல் துவாதாசாந்தத்திற் செல்லும் வழி. அஃது உச்சித் துளையாம். அதனைத் திறத்தலாவது, உணர்வு அதனைக் கடந்து செல்லும் இயல்பினை அடைதல் `மேல் வாசலை` என மொழி மாற்றி யுரைக்க.
இதனால், சிவசொரூப பர சொரூபங்களை அடைதற்கு உபாயம் கூறி முடிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage