
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம்
பதிகங்கள்

மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து
அணியென லாய்நின்ற ஆறது போலத்
தணிமுச் சொருபாதி சத்தியால் சாரப்
பணிவித்த பேர்நந்தி பாதம்பற் றாயே.
English Meaning:
Jiva Shines in Triple MuktiIn Triple Mukti Jiva receives Light Divine
With light and brilliance infused,
The crystal as a gem shines;
Like it is Jiva
When he attains Muktis Three
And Grace of Sakti Divine;
Hold to the Feet of Nandi
Who all these Graces ordained.
Tamil Meaning:
இரத்தினங்கள் நிறம், ஒளி, வடிவம் என்பவற்றைப் பெற்றுப் பல அணிகலங்களாய் நிற்கும் முறைமை போலத் தான் `பரம், சிவம், ஆன்மா` என்னும் முச்சொரூபத்தை யுடையதாகி அந் நிலைகளில் தனது சத்தியால் சீவனும் அடங்கித் தோன்றும்படி செய்த, `நந்தி` என்னும் பெயரையுடைய அந்த முதல்வனது திருவடிகளையே பற்றாகப் பற்றி உய்வாயாக.Special Remark:
பரம் - சொரூப சிவம். அதன் வடிவம் அகண்டமாய் இருத்தல் பின்னர்க் கண்டமாய் உள்ள வடிவத்தைக் கூறுதலின் அதனோடு ஒப்ப அகண்டத்தையும் `வடிவம்` என்றார். `இலக்கணம்` என்றது வடிவத்தை. சிவம் - சதாசிவன், மகேசுரன் ஆகிய தடத்த சிவங்கள். இனிச் சிவமே ஆன்ம சொரூபமாய் நிற்றலாவது சீவனில் அதுவேயாய்க் கலந்து நிற்றல். `பர சொரூபம் சிவ சொரூபமாயும் ஆன்ம சொரூபமாயும் நிற்றல் ஆதி சத்தியால் என்றபடி ``ஆதி சத்தியால்`` என்பதன் பின், `அவற்றில்` என்பது வருவிக்க.இதனால், `ஒரு பெரும் பொருளே தனது சத்தியால் முச்சொரூபமாய் நின்று உயிர்களை உய்விக்கின்றது` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage