
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம்
பதிகங்கள்

கல்லொளி மாநிறம் சோபைக் கதிர்தட்டல்
நல்ல மணிஒன்றில் நாடில்ஒண் முப்பதம்
சொல்லறு பாழில் சொல்லறு பேர்உரைத்(து)
அல்லறு முத்திராந் தத்தனு பூதியே.
English Meaning:
Beyond Triple Mukti is Mudra of JnanaWith crystalline hue and radiant brilliance,
The Lord stands as a gem of purest ray serene;
Seek Him and reach the Mukti State Three;
Beyond is Void that defies speech,
There contemplate on Aum in Silence
In that Mudra of Jnana
The final Grace is.
Tamil Meaning:
பிற மணிகளில் ``ஒளி`` என்றும், `நிறம்` என்றும் `சோபை` என்றும் இங்ஙனம் பல பெயர்களால் சொல்லப்பட்டு விளங்குகின்ற கதிர்கள் ஒரு படிக மணியிலே பொருந்த, அப்படிக மணிவேறு பல மணிகளாய்க் காட்சியளிப்பது போன்றதே `தத்துமசி` மகாவாக்கியத்தால் உபதேசிக்கப்படும் பொருள். அஃதாவது, `உயிர் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடையது ஆதலின், பாசத்தைச் சார்ந்து பாசமாய் இருந்த நீ, அந்நிலை நீங்கிச் சிவத்தைச் சார்ந்து சிவம் ஆகிறாய்` என்பதாம். (சீவன் பாசமாய் இருந்த நிலை சொல்லால் சொல்லப்படும். அஃது அந்நிலையினின்றும் நீங்கிச் சிவமாகிய நிலை) சொல்லால் சொல்ல வாராது, முத்தி பஞ்சக்கரமும் மொழியாய் இராது அனுபவமான ஒளி நிலையாகும். இது முப்பாழும் கடந்த நிலையும், குரு பஞ்சாக்கரத்தை உபதேசித்து, சின்முத்திரையால் அஞ் ஞானத்தைப் போக்கி, மெய்ஞ்ஞானத்தை உணர்த்திய முடிந்த நிலையும் ஆகும்.Special Remark:
``நல்ல மணி`` என்றது சார்ந்ததன் வண்ணமாம் இயல்பால் சாரப்பட்ட பல மணிகளாய் விளங்கும் மணி: என்றது படிக மணியை. ஆகவே, ``கல்`` என்றது பிற மணிகளையாயிற்று. கதிரின் இயல்பை இனிது விளக்குவார் அதனைப் பல பெயர்களால் குறித்தார். ``தட்ட`` என்பதை ``ஒன்றின்`` என்பதன் பின்னர்க் கூட்டுக, முப்பதம் - முப்பதப் பொருள். இது சொல்லாகுபெயர். இதன்பின், `ஆம்` என்பது எஞ்சி நின்றது. அல் - இருள். அல் அறுத்ததைக் கூறவே, ஒளியை வழங்கியதும் தானே பெறப்பட்டது. அறு முத்திரை, `அறுத்த முத்திரை` எனப் பிறவினை வினைத்தொகை. `உரைத்த அறுத்த` என்பதற்கு. `குரு` என்னும் எழுவாய் வருவித்துக்கொள்க.இதனுள், `முச்சொரூபத்துள் முடிவான பர சொரூபத்தை குரு உபதேசத்தின் வழி அடைதலே முடிநிலைப் பயன் என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage