ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. தோன்றிஎன் னுள்ளே சுழன்றெழு கின்றதோர்
    மூன்று படிமண் டலத்து முதல்வனை
    ஏன்றெய்தி இன்புற் றிருந்த இளங்கொடி
    நான்று நலஞ்செய் நலஞ்செயு மாறே.
  • 2. மன்று நிறைந்தது மாபரம் ஆயது
    நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
    கன்றை நினைந்தெழு தாய்என வந்தபின்
    குன்று நிறைந்த குணவிளக் காகுமே.
  • 3. ஆறாறு தத்துவத் தப்புறத் தப்பரம்
    கூறா வுபதேசம் கூறில் சிவபரம்
    வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்
    பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.
  • 4. பற்றறப் பற்றில் பரம்பதி யாவது
    பற்றறப் பற்றில் பரன்அறி வேபரம்
    பற்றறப் பற்றினைப் பற்றவல் லோர்கட்கே
    பற்றறப் பற்றில் பரம்பரம் ஆகுமே.
  • 5. பரம்பர மான பதி பாசம் பற்றாப்
    பரம்பர மாகும் பரம் சிவம் மேவப்
    பரம்பர மான பரசிவா னந்தம்
    பரம்பர மாகப் படைப்ப தறிவே.
  • 6. நனவில் கலாதியாம் நால்ஒன் றகன்று
    தனிஉற்ற கேவலந் தன்னில் தானாகி
    நினைவுற் றகன்ற அதீதத்துள் ஞேயந்
    தனையுற் றிடத்தானே தற்பரம் ஆமே.
  • 7. தற்கண்ட தூயமும் தன்னில் விலாசமும்
    பிற்காணும் தூடணந் தானும் பிறழ்வுற்றுத்
    தற்பர கால பரமும் கலந்தற்ற
    நற்பரா தீதமும் நாடக ராதியே.