
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 20. முப்பரம்
பதிகங்கள்

நனவில் கலாதியாம் நால்ஒன் றகன்று
தனிஉற்ற கேவலந் தன்னில் தானாகி
நினைவுற் றகன்ற அதீதத்துள் ஞேயந்
தனையுற் றிடத்தானே தற்பரம் ஆமே.
English Meaning:
Beyond Kalanta is Tat-Para State (God-Union and Not God-Becoming Yet)Transcend Kalas Five
In the Waking State (of Turiya) appear;
Reach the lonely State of Higher Kevala (inertness)
And there solitary be;
Bereft of sentience,
Ardent enter the (Turiya) atita State;
Then shall you the very Tat-Para be.
Tamil Meaning:
சகலத்தில் புருவ நடுவிலே நிகழும் `கேவல சாக்கிரம், சகல சாக்கிரம்` என்னும் இருவகைச் சாக்கிரத்துள், வித்தியா தத்துவங்களில் கலை முதலிய ஐந்து தத்துவங்களும் செயற்படாது ஒடுங்கிய நிலையில் ஆன்மா உயிர்ப்பும் இன்றித் தனித்துக் கிடக்கும் ஒருநிலையை அடையும் அந்நிலையும் ஒருவகைக் கேவலமே. அந் நிலையில் கருவிகள் இல்லாவிடினும், ஆணவம் உள்ளது. கருவிகள் ஒடுங்கிய நிலையில் இந்தக் கேவல நிலை உண்டாகாமல் நீங்கித் திருவருள் அறிவிக்க அறிதலாகிய அறிவினைப் பெற்று அறிகின்ற சாக்கிரம் முதலியவைகளை அடைந்து, முடிவாக அதீதத்தை எய்தி, அதன்கண் விளங்குகின்ற ஞேயத்தில் அழுந்தும் பொழுதே ஆன்மா, மேற்கூறிய பசு பரமாகிய தற்பரமாய் நிற்கும்.Special Remark:
நாலொன்று - ஐந்து. இரண்டாம் அடி, `சகலத்தில் சகலம்` என்றும், `மகா சகலம்` என்றும் சொல்லப்படுகின்ற மத்தியாவத்தையில் நிகழும் அதீதத்தின் இயல்பைக் கூறியது. ``நினைவுற்று அகன்று`` என்பதை `அகன்று நினைவுற்ற` என மாற்றிக் கொள்க. அகலுதல், மேற்கூறிய அதீதத்தை. நினைவுறுதல் - அறிவு பெறுதல். இவ்விடத்தில் அது திருவருளால் நிகழ்வதாகும். `இதுவே நின்மலாவத்தை` என்பதை மேலெல்லாம் கூறியவாற்றான் அறிக. `தான்` என்றது ஆன்மாவை. `தற்பரமே பசுபரம்` என்பது முன்மந்திர உரையில் கூறப்பட்டது.இதனால், `முன்மந்திரதிற் கூறப்பட்ட நிலையை ஆன்மா அடைதற்கு வழி நின்மலாவத்தை` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage