
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 20. முப்பரம்
பதிகங்கள்

பரம்பர மான பதி பாசம் பற்றாப்
பரம்பர மாகும் பரம் சிவம் மேவப்
பரம்பர மான பரசிவா னந்தம்
பரம்பர மாகப் படைப்ப தறிவே.
English Meaning:
Pati-Pasam Leads to Para, Para Siva and Para Siva-AnandaCherish Pati-Pasam(God-love)
That is holy beyond holiness;
Then shall the transcendental Para be;
And then beyond Parasiva reached be;
Then shall the transcendental Siva Bliss (Parasivananda) be;
Jiva Becoming Siva is indeed Knowledge Divine.
Tamil Meaning:
பாசங்களோடு சிறிதும் தொடர்பின்றி, மேலானதற்கும் மேலானதாய் நிற்கின் அதுவே மிகமேலான பரம்; பதி. (என்றது `பசு பரம்` என்றபடி பாசங்களின் மேலானது பசு; அது பரம். அதற்கு மேலானது பதி; அது பரம்பரம் `தற்பரம்` என்றும் சொல்லப் படும். தற்பரம் தனக்கு மேலானது. `தன்` என்பது ஆன்மா தற்பரம், பரமான்மா `தத்துவ பரம்` என்பது தத்துவங்களைக் கடந்த நிலையை மட்டும் குறிப்பது. `பசு - பரம்` என்பது, கன்மம் திரோதாயி இவற்றிற்கு மேல் பசு இவற்றையும் கடந்தது பசுபரம்) இவ்வாறான `பரம்` என்றும் `சிவம்` என்றும் சொல்லப்படுகின்ற அந்தப் பொருளை உயிர், மாயா காரியப் பொருள்களில் எந்த ஒன்றினின்றும் அடையப்படாத பேரானந்தத்தையுடையதாகும். அந்த ஆனந்தத்தைப் பொருளாகக் கொண்டு முயன்று அடையும் அறிவே, `அறிவு` என்று சொல்லப்படும்.Special Remark:
பாசம் பற்றாப் பரம்பரம், பரம்பரமான பதியாகும் என இயைக்க. ``பரசிவானந்தம்`` என்பதன் பின்னர், `ஆகும்` என்பது எஞ்சி நின்றது. இதன்பின், `இதனை` என்பது வருவிக்க.இதனால், முப்பரங்களில் `பசுபரம்` என்பது இது - என்பதும் `அது பாசத்தோடு தொடர்பின்றி ஆனந்த மயமாய் உள்ளது` என்பதும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage