
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்
- ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு
- ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம்
- ஆறாம் தந்திரம் - 4.துறவு
- ஆறாம் தந்திரம் - 5.தவம்
- ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்
- ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல்
- ஆறாம் தந்திரம் - 8. அவ வேடம்
- ஆறாம் தந்திரம் - 9. தவவேடம்
- ஆறாம் தந்திரம் - 10. திருநீறு
- ஆறாம் தந்திரம் - 11. ஞான வேடம்
- ஆறாம் தந்திரம் - 12. சிவ வேடம்
- ஆறாம் தந்திரம் - 13. அபக்குவன்
- ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்
Paadal
-
1. ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.
-
2. எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமும்
செம்மா தவத்துச் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவ ரேயல்லால்
இம்மா தவத்தின் இயல்பறி யாரே.
-
3. பிறப்பறி யார்பல பிச்சைச்செய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகியே மாதவம் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே.
-
4. இருந்து வருந்தி எழிற்றவம் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
இருந்திந் திரனே எவரே எனினும்
திருந்தும்தம் சிந்தை சிவனவன் பாலே.
-
5. கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் னிறத்தன்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.
-
6. அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே
அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே.
-
7. சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தஅப் பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே.