
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 5.தவம்
பதிகங்கள்

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் னிறத்தன்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.
English Meaning:
Only Tapasvins Can Approach LordHidden, yet not hidden,
He appears not to the naked eye;
He of the spreading matted locks;
The gold-hued;
None but they of hard tapas may near Him;
Do hasten and Him adore,
He, the mighty one of the white moon crest.
Tamil Meaning:
அறிவரால் சிறிதும் தாழ்த்தலின்றி மிகவிரைந்து சார்ந்து தொழப்படுவோனாகியசிவன், கண்ணுக்கும் புலனாகாது மறைந்திருப்போனாயினும் சிலருக்கு வெளிநிற் பவனாகின்றான். அச்சிலராவார் அரிய தவத்தவரே யாகலான், அவருக்கல்லது அவன் அணுகலாகாதவனாம்.Special Remark:
`ஆகவே, அத்தவத்தையே ஒருதலையாகச் செய்க` என்பது குறிப்பெச்சம் இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, அதன் பின் ஈற்றடியைக் கூட்டி, அதன்பின் முதலடியை, ``கண்ணுக்கும்`` என்னும் உம்மை சிறப்பு பலனைச் சென்று பற்றுதல் கண்ணுக்குள்ள சிறப்பாம்.இதனால், தவமே இறைவனைக் காட்டுவதாதல் கூறப் பட்டது.
இதன்பின் பதிப்புக்களில் உள்ள, ``பின்னெய்த வைத்தோர்`` என்னும் மந்திரம் மேல், சிவ குரு தரிசன அதிகாரத்தில் வந்தது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage