
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 5.தவம்
பதிகங்கள்

பிறப்பறி யார்பல பிச்சைச்செய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகியே மாதவம் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே.
English Meaning:
Tapasvin Ends BirthThe Tapasvins many that live by alms
Have no life hereafter;
On them shall be showered
All blessings of Spiritual wealth;
They that perform tapas incessant
Attain the power to end
All births to be.
Tamil Meaning:
உலகப் பித்துப் பலவற்றையும் கொண்டு உழலு கின்ற மக்கள் பிறவித் துன்பத்தைச் சிறிதும் எண்ணுதல் இல்லை; (அதனால் அவர் அதனை நீககிக் கொள்ள முயல்வதும் இல்லை) வீடு பேற்றோடு தாம் விரும்பும் இம்மை மறுமைச் செல்வங்களையும் பெறுவார். இறைவனை ஒருஞான்றும் மறவாது பெரிய தவச்செயலைச் செய்பவரே யாதலின், அவரே பிறவித் துன்பத்தை நீக்கிக்கொள்ளும் பெருமையைப் பெற்றாருமாவர்.Special Remark:
இரண்டிடத்தும், ``பிறப்பு`` என்பது அதனால், விளையும் துன்பத்தைக் குறித்தது. `பித்து` என்பது `பிச்சு` எனப் போலி யாயிற்று. சிறப்பு - வீடு. மறத்தற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது. `மாதவமாவது இது` என்பது மேலே சொல்லப்பட்டது.இதனால், `தவம் எல்லாப் பயனையும் தரும்` என்பதும், அதனை யொழிதல் மயக்கத்தினால் என்பதும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage