
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 34. மோட்ச நிந்தை
பதிகங்கள்

ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
போவர் குடக்கும் குணக்கும் குறிவ
நாவினில் மந்திரம் என்று நடுஅங்கி
வேவது செய்து விளங்கிடு வீரே.
English Meaning:
Seek God Within Through Kundalini YogaNorth and South, men wander about seeking Him
East and West, Celestials go about looking for Him,
But fix divine Mantra (Aum)
On to Muladhara,
And rouse (Kundalini) Fire, upward to stream;
There shall you as Radiant Light be.
Tamil Meaning:
(தலையில் வலக் கன்னத்தை, `தெற்கு` என்றும், இடக் கன்னத்தை `வடக்கு` என்றும், நெற்றியை, `கிழக்கு` என்றும், பிடரிக்கு மேல் உள்ள பகுதியை `மேற்கு` என்று குழூஉக் குறியாக வழங்குதல் சித்தர் மரபு. அம்முறையில்.)தெற்கும், வடக்கும் உயர்வுடையன. அத்திசையிகளில் தேவர்கள் உலாவுவார்கள். (சூரிய கலை சந்திர கலைகளாகிய பிராணங்கள் வியாபிக்கும்.) மேற்கும், கிழக்கும் யோகி தன் தியானப் பொருளைக் குறித்துச் செல்லும் வழிகளாம். அங்ஙனம் செல்லும் பொழுது நாவால் உச்சரிக்கப் படுவன மந்திரங்கள். இவற்றை யெல்லாம் இவ்வாறு உணர்ந்து, மூலாக்கினியை எழுப்பி
நடுநாடி வழியாக ஓங்கச் செய்து, அதனால் அறிவு விளங்கப் பெறுவீர்களாக.
Special Remark:
`அங்ஙனம் அறிவு விளங்கப்பெற்றால், சுவர்க்க நரகங்களும், அவற்றைக் கடந்துள்ள சுத்த புவனங்களும் விளங்கச் சித்தாந்த முத்தி நிலையும் விளங்கும்` என்பது குறிப்பெச்சம். ஆவது - உயர்ந்து நிற்பது, இதனை, தெற்கு, வடக்கு இரண்டனோடும் தனித்தனிக் கூட்டுக. மந்திரமாவன பிரணவமும், அம்சமும், திருவைந்தெழுத்துமாம். `உணர்ந்து` என்பது சொல்லெச்சம்.இதனால், `உண்மை முத்தி நிலையை யோகக் காட்சியால் இவ்வுலகிலே உணர்தல் கூடும்` என்பது கூறப்பட்டது. அதனால், அதனை `இல்லை` என்றல் குற்றமாதல் பெறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage