
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 34. மோட்ச நிந்தை
பதிகங்கள்

தாமரைநூல் போலவ தடுப்பார் பரத்தொடும்
போம்வ வேண்டிப் புறத்தே உதர்வர்
காண்வ காட்டக்கண் காணாக் கலதிகள்
தீந்நெறிச் சென்று திரிகின்ற வாறே.
English Meaning:
They Seek Him Not—The Witless OnesContinuous as thread within lotus stalk
Is Param within;
Yet they seek Him not there;
But wander about everywhere;
Though the Way to reach Him shown
They see it not;
Fools are they;
They roam about,
Only evil destiny action to reach.
Tamil Meaning:
தாமரைத் தண்டின் நூல்போல் அறிவுடையார் முன் எளிதில் அற்றுப்போகின்ற நூல்களால், உண்மை நூல்களின் வழிச் செல்வாரைத் தடுக்கின்றவர்கள் தாங்கள் மேல்நிலையை அடைய விரும்பி, அதற்கு மாறான வழிகளில் சென்று அலைவார்கள் அவர்களது செயல்கள், தெரிய வேண்டிய வழியைத் தெரிந்தவர் காட்டினாலும் அதனைக் கண் கொண்டு பாராத குருடர்கள் தாங்கள் அறிந்ததே வழியாகக் கொண்டு துன்பம் தரும் வழிகளில் திரியும் செயல் போன்றனவேயாம்.Special Remark:
`நூல்` என்னும் பெயர் ஒற்றுமை பற்றித் தாமரை நூலை எடுத்துக்காட்டினார்.``உன்நூலும் ஒருநூலா உரைப்ப தென்னே!
உலட்டு நூல், பருத்தி நூல், சிலம்பி நூல்கள்``*
என அருணந்தி தேவரும் கூறுதல் காண்க. `போல்வவற்றால் தடுப்பார்`` என உருபு விரிக்க. வினையொடு தொகுங்கால் மூன்றாவதன் தொகை விகற்பப் புணர்ச்சியைப் பெறும். ``வாள்போழ்ந் தட்ட நீள்கழல் மறவர்`` என்றது காண்க. `பரத்தொடும் - போம்வழி தேடிப் புறத்தே திரிதர்வர்`` என்பதை, ``கனக வகை குறித்துக் போய்க் கடற்கே வீழ்வார்``* என்றது போலக் கொள்க. ``திரிகின்றவாறு`` என்பதற்கு எழுவாய் வருவிக்கப்பட்டது.
இதனால், முத்தியைப் பல்வேறாகக் கூறும் சமய நூல்களின் பொருந்தாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage