
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி
பதிகங்கள்

தாமத காமிய மாதி தகுகுணம்
ஆம்மலம் மூன்றும் அகரா உகாரத்தோடு
ஆம்அறும் அவ்வும்உவ்வும் மவ்வாய் உடல்மூன்றினில்
தாம்ஆம் துரியமும் தொம்தத் தசியதே.
English Meaning:
The Three Turiyas in the Three Letters A, U, M (Aum)The Gunas Three, Tamas and the rest,
The Malas Three, Kamiya and the rest,
No more are:
A, U and the consonant M,
In those letters Three are Turiya Three
All these are of Tvam-Tat-Asi, forsooth.
Tamil Meaning:
முக்குணங்களும், மும்மலங்களும் `அ, உ, ம` என்னும் பிரணவ கலைகள் செயற்படில் செயற்படும்; ஒடுங்கில் ஒடுங்கும். அச்செயற்பாடு ஒடுக்கங்களும் மூவகை உடம்பின் கண் நிகழும் `தொம், தத், அசி` என்னும் முப்பதங்களின் சூனியங்களும் அவ்வாறேயாம். அஃதாவது `முச்சூனியங்கள் நின்மல துரியத்தில் நிகழும்` என்பதாம்.Special Remark:
`தாமத மாதி குணம், காமியமாதி மலம்` எனக் கூட்டுக. ``மூன்றில்`` என்பதன் பின் `நிகழும்` என்பது வருவிக்க. உடல் மூன்று, இவ்வதிகாரத் தொடக்கத்தில் சொல்லப்பட்டன. தாம் ஆம் துரியம் - ஆன்மாச் சுத்தி பெற்ற நின்மல துரியம் `தொம் தத், அசி` என்பன அவற்றின் சூனியங்களைக் குறித்தன.இதனால், முச்சூனியங்களின் இயல்புகள் தொகுத்துக்கூறி முடிக்கப்பட்டன. இவற்றால் இவை பிராசாத யோகத்தில் சொல்லப்படும் சூனியங்கள் ஆகாமை விளங்கும்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage