
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி
பதிகங்கள்

வைத்துச் சிவத்தை மதிசொரூ பானந்தத்து
உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து
அத்தற் கடிமை அடைந்துநின் றாயே.
English Meaning:
As Tatvamasi, Practise YogaThus altering the expression
Into Tatvamasi with Siva (Tat) first
Fix your thought on bliss of Svarupa;
And gently hold to your heart
The Pranava mantra (that is ``Aum``);
When Jiva thus practises Yoga
He realizes Truth
And stands, in Grace accepted.
Tamil Meaning:
முன் மந்திரத்திற் கூறியவாறு முத்தி பஞ்சாக்கரத்தை சிவ முன்னாக வைத்து உணர்வைப் பர சொரூபமாகிய ஆனந்த நிலையிற் செலுத்தி அதனோடே பிரணவமாகிய அந்த உபதேச மந்திரத் -தையும் அவ்வாறே உள்ளத்தில் சேர்ப்பி, சேர்ப்பித்தால், அப்பொழுதே நீ மெய்யுணர்வைப் பெற்றுச் சிவனுக்கு அடிமையாகி விடுவை.Special Remark:
முன்மந்திரத்தை அடுத்து அந்தாதியாக ``வைத்து`` என்றனால், `முன் வைத்து` என்றதாயிற்று. பிரணவத்தையும் அவ்வாறாகி வைக்கும் முறை பின்னர்க் கூறப்படும். தெளிவு பற்றி எதிர்காலம் இறந்த காலமாயிற்று.இதனால், பிரணவமும், தத்துவமசி, முத்திபஞ்சாக்கரம் இவை போல முச்சூனியத்தைத் தரும்` என்பது கூறப்பட்டது. `சிவத்தை முன் வைத்து` என்றது அனுவாதம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage