
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி
பதிகங்கள்

தொந்தத் தசிய வாசியில் தோற்றியே
அந்த முறைஈரைந் தாக மதித்திட்டு
அந்த மிலாத அவத்தைஅவ் வாக்கியத்(து)
உந்து முறையில் சிவ முன்வைத் தோதிடே.
English Meaning:
Tvam-Tat-Asi Becomes Tat-Tvam-AsiAttain the State of Tvam-Tat-Asi
Through coursing breath (in Yogic Way)
Consider it as the Tenth State of (Turiya) experience;
Endless is that Experience;
Alter that expression so
That Siva (Tat) stands first
(That is Tat-Tvam-Asi, or Tatvamasi)
Thus meditate on it and ascend.
Tamil Meaning:
`தொம், தத், அசி` என்னும் மூன்று பதங்களையும் முத்தி பஞ்சாக்கர மூன்றெழுத்துக்களில் முறையே யகார சிகார வகாரங் -களில் வைத்து அந்த முறையிற்றானே தூல பஞ்சாக்கரம் ஐந்தும், சூக்கும பஞ்சாக்கரம் ஐந்தும் அடங்கியிருப்பதாகக் கொண்டு அதனையே அழிவில்லாத யோகாவத்தை நின்மலாவத்தை பராவத்தைகளில் `தொந்ததசி` வாக்கியமாகச் சிகார வகாரங்களை முன் வைத்து உச்சரி.Special Remark:
`அவத்தையில்` எனவும், `அவ்வாக்கியத்தை` எனவும் அவ்வவ்வுருபினை விரிக்க. `ஓதினால் முச்சூனியமும் விளையும்` என்பது குறிப்பெச்சம்.இதனால், திருவைந்தெழுத்து மந்திரமே தத்துவமசி மகா வாக்கியமாய் முச்சூனியங்களைத் தருதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage