
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி
பதிகங்கள்

தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி
தொந்தத் தசிமூன்றில் தொல்தா மதமாதி
வந்த மலம்குணம் மாளல் சிவம் தோன்ற
இந்துவின் முன்இருள் நீங்குதல் ஒக்குமே.
English Meaning:
Siva Appears Beyond Tvam-Tat-AsiIn the Three States Tvam Tat and Asi
Are the time-honoured Malas Three—Kamiya and the rest
In the Three States Tvam Tat and Asi
Are the time-honoured Gunas Three—Tamas and the rest
When these Malas and Gunas are seared,
Siva appears;
And as He appears, they fleet away,
As does darkness before moon`s beam.
Tamil Meaning:
முன் மந்திரத்தில் கூறிய மூன்று அறுதிகளுள் தொம்பத அறுதியில் (சீவ அறுதியில்) மாயா - மலமும், தற்பத அறுதியில் பர அறுதியில்) ஆணவ மலமும், அசிபத அறுதியில் (சிவ அறுதியில்) கன்ம மலமும் நீங்கும். அவ்வாறே அம்மூன்று அறுதிகளிலும் முறையே இராசதம், சாத்துவீகம் தாமதம் என்னும் குறைகள் நீங்கும். இவ்வாறு மூவறுதியில் மும்மலங்களும், முக்குணங் களும் நீங்குதல் நிலாவின் முன் இருள் நீங்குதலை ஒக்கும்.Special Remark:
``மூன்றில்`` என்பன இரண்டும், `மூன்று அறுதிகளில்` என்றபடி. ``காமியம் ஆதி`` என்பதை, `காமியம், ஆணவம், மாயை என்றவாறாகக் கொண்டு, அவற்றை எதிர் நிரல்நிறையாகப் பொருத்துக தாமதமாதி முக்குணங்களை ஏற்ற பெற்றியால் பொருத்திக் கொள்க. ``சிவம் தோன்ற`` என்பதை ``மலம் குணம் மாளல்`` என்பதற்கு முன்னே கூட்டுக. ``ஆதி`` என்பதன் பின், `நீங்கும்` என்பது வருவிக்க.இதனால், முச்சூனியங்களில் நிகழ்வன சில கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage