
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி
பதிகங்கள்

ஆகிய அச்சோயம் தேவதத் தின்இடத்து
ஆகி யவைவிட்டால் காயம் உபாதானம்
ஏகிய தொம் `தத் தசி` என்ப மெய்யறி
வாகிய சீவன் பரசிவ னாமே.
English Meaning:
Jiva in Different Places and TimesDeva Datta* is one and same person;
But through time and place he different appears;
Like it,
If Jiva transcends time and place,
He and Siva one becomes (So-ham)
In Tvam-Tat-Asi,
Jiva in body one with Primal Cause is:
Attaining True Jnana
Jiva becomes Para Siva.
Tamil Meaning:
`சோயம் தேவதத்தன்` என்பது `தேவதத்தனாகிய அவனே இவன்` என்பது இதன் பொருள். ஒரு வடமொழி உதாரணம். இதன் விளக்கம் இல்லற நிலையில் அதற்குரிய கோலமும், உடையும், பெயருமுடையவனாய் இருந்த ஒருவன் அவற்றையெல்லாம் விடுத்துத் துறவியாகி, அதற்குரிய கோலம், தண்டு கமண்டலம், வேறு பெயர் ஆகியவற்றைக் கொண்டால், `அவன்` எனப்பட்ட நிலையில் அவனிடம் இருந்த சேர்க்கைப் பொருள்களையெல்லாம் விடுத்து, அவற்றை உடையவனாய் இருந்த அவனை மட்டுமே கொண்டு, `இவன்` எனச் சுட்டுதல் போல்வதே `சீவன் சிவமாகிறது` என்றலும் - என்பது அஃதாவது பசுத்துவத்தால் `சீவன்` எனப்படுகின்ற உயிர் அப்பசுதுவத்தின் நீங்கித் தூயதாகிய நடுநிலையிலேதான் சிவனைச் சார்ந்து சிவமாகின்றது என்பதாம்.Special Remark:
ஆகிய - இயற்சொல்லாகாது, ஆக்கச் சொல்லாய் அமைந்த அகரச்சுட்டு `சோயம் தேவத்தன்` என்னும் தொடர் முழு வதையும் சுட்டிற்று. ``இடத்து`` என்பது ஏழாம் வேற்றுமை பொருட்டாய் நின்றது. ஆகியவை - சேர்க்கைப் பொருளாகச் சேர்ந்துள்ளவை. `விட்டாற்போல` என உவம உருபு விரிக்க. `காயம் முதலிய` என ஒரு சொல் வருவிக்க. ஏகிய - நீங்கிய. ``ஏகிய` `தொம்` என்பதையே - தத் அசி - என்ப`` என முடிக்க. இங்ஙனம் கூறிய வற்றின் விளக்கமாகேவே, ``மெய்யறிவாகிய சீவன் பரசிவன் ஆமே`` என்பது கூறப்பட்டது. சீவனே என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப் பட்டது. ``மெய்யறிவாகிய சீவன்`` என்றதனால், அது பொய்யறி வாகிய உடம்பு முதலியவற்றின் நீங்கினமை பெறப்பட்டது. இவ்வாறு பொருள் கொள்ளுதல் விட்டு விடாத `லக்கணை` எனப்படும். இலக்கணை பின்பு விளக்கப்படும்.``சோயம் தேவதத்தன்`` என்னும் இவ்வுதாரணத்திற்கு ஏகான்ம வாதிகள் தரும் விளக்கம், `இல்லறத்தானாய் இருந்தவன் எவனோ அவனேதான் துறவியானவனும்; வேறொருவனல்லன்; அதுபோலத் -தான் சீவனும், பிரமமும் வேறாகாததும்` என்பது. துறவிக்கும் இல்லறத்தானுக்குப் போலக் கோலமும், உடைமையும் ஒழுக்கமும் உள்ளன ஆகலின், அவற்றைப் பெற்றவனே துறவியாதல் நினைக்கத் தக்கது.
இதனால், முச்சூனிய நிலை உவமையில் வைத்து விளக்கப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage