
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 10. சகமார்க்கம்
பதிகங்கள்

வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்
வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும்
உளங்கனிந் துள்ளே உகந்துநிற் பார்க்குப்
பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே.
English Meaning:
Love the Basis of YogaEven for the Yogi austere
Who attains the glossy hue of the rich ripe fruit
The Lord is hard of shell unto the wood-apple fruit,
But to them whose hearts ripe in love,
And taste the sweets of divine rapture,
He opens all of Himself
Like a rich fruit mature.
Tamil Meaning:
மேற் கூறிய சிவன், வேடத்தால் வளப்பமானகனி (சிவப் பழம்) போன்ற பொலிவையுடையராய் உள்ள சரியை கிரியா மார்க்கத்தார்க்கும் வளப்பமான கனி கிடைத்தாற்போலும் உண்மையையே உடையனாவன். ஆயினும், யோகத்தால் உள்ளம் பழுத்து அவனை உள்ளத்தே விரும்பிக் கண்டுகொண்டிருப்பவர்க்குப் பழம் அளிந்து கிழிந்து சாற்றைப் பொழிதல் போல மிக்க இன்பத்தைத் தருபவனாய் இருப்பன்.Special Remark:
வளங்கனி - வளவிதாகிய கனி. பகுதல் - கிழிதல். ``பகுந்து`` என்றது, `கிழிந்து பொழிந்தாற் போன்று` எனப் பொருள் தந்தது. ஈற்றடி இனவெதுகை பெற்று நின்றது.இதனால், சரியை கிரியைகள் சகமார்க்கமாகாது, யோகமே சகமார்க்கமாயினவாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage