
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 10. சகமார்க்கம்
பதிகங்கள்

பிணங்கிநிற் கின்றவை யைந்தையும் பின்னை
அணங்கி எறிவன் அயில்மன வாளால்
கணம்பதி னெட்டும் கருதும் ஒருவன்
வணங்கவல் லான்சிந்தை வந்துநின் றானே.
English Meaning:
Siva is in Yogi`s ThoughtHe harries and subdues the conflicting senses five
With the sharp sword of his determinate will;
In his though emerges Lord
Whom the eighteen Ganas seek;
Verily, the yogi deserves our obeisance.
Tamil Meaning:
சிவயோகம் வல்லானது சிந்தையிடமாகப் பதினெண் கணங்களும் வணங்குகின்ற தனித்தலைவனாகிய சிவன் வந்து நிலைத்து நிற்பானாயின், பின்பு அவன் தன்னோடு இகலி நிற்கின்ற ஐம்பொறிகளாகிய பகைவர்களைத் தனது மனமாகிய கூரிய வாளால் தாக்கி வெட்டி யொழிப்பான்.Special Remark:
`பிணங்கி நிற்கின்றவையாகிய ஐந்தையும்` என்க. `பிணங்கி நிற்கின்ற ஐயைந்தையும்` எனப் பிரித்து, `இருபத்தைந்து தத்துவங்களையும்` எனவும் உரைப்பர். அணங்குதல் - வருத்துதல். `அணங்க` எனப்பாடம் ஓதுதலுமாம். `அயில்மனம்` என்பது, `இன்பதுன்பங்களை நுகர்கின்ற மனம்` என்னும் பொருட்டாய், `சிலேடை வகையால் கூர்மையான மனம்` எனப் பொருள் தந்தது. இனி, `மனத்துக்குக் கூர்மை நுண்ணிதாக நோக்கல்` எனலுமாம். `அயிர்மனம்` என்பது பாடம் அன்று. யோகமாகிய அக வழிபாட்டினையே இங்கு, ``வணங்குதல்`` என்றார். `நின்றானேல்` என்பதில், `எனில்` என்பதன் மரூவாகிய `ஏல்` என்பது எஞ்சி நின்றது, `நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தால், பின் நீ என் செய்வை` என்பதிற்போல. `சிந்தை சிவன் வந்து நின்றானேல்` `பின்னை ஐந்தையும் எறிவன்` என்றது, `சிவன் வந்து நிற்கும் சிந்தை யில்லாதார் அது மாட்டார்` என்பதைத் தோற்றுவித்து நின்றது.இதனால், சிவயோகமே ஐம்பொறிகளை வென்று, சிவனோடு சிந்தையால் கூடி நிற்கின்ற சகமார்க்கமாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage