
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 10. சகமார்க்கம்
பதிகங்கள்

மருவுந் துவாதச மார்க்கமில் லாதார்
குருவும் சிவனும் சமயமும் கூடார்
வெருவும் திருமகள் வீடில்லை யாகும்
உருவும் கிளையும் ஒருங்கிழப் பாரே.
English Meaning:
Without Sahamarga They Lost AllThey that follow not twelve-tiered Path of Sahamarga,
Neither will they know Guru nor God, nor Faith True;
The Goddess of Grace will frown at them;
Salvation shall never their portion be;
And they do lose both—
Their stature and kith.
Tamil Meaning:
சிரசிற்குமேல் பன்னிரண்டங்குலமாகச் சொல்லப் படுகின்ற நிராதாரத்தைப் பொருந்துகின்ற யோகநெறி யில்லாது, பிற வற்றையே யோகமாக மயங்குவோர், ஞான குருவையும், சிவனை யும், உண்மைச் சமயத்தையும் அடையமாட்டார். அவர் அணி மாதியாக விரும்பும் சித்திகளாகிய செல்வத்தைத் தரும் திருமகளும் அவர்பால் அணுக அஞ்சுவாள்; மோட்சமும் அவருக்கு இல்லை. உடம்பையும், சுற்றத் தொடர்பையும் வீணே இழப்பர்.Special Remark:
துவாதச மார்க்கம், பிராசாத யோகமுமாம். மேற் காட்டிய திருக்களிற்றுப்படியின்படி, சிவயோகம் அல்லாதன அவ யோகமாதலை வலியுறுத்துக் கூறியவாறு, சுற்றமும் பயன் செய்யாமை கூறவே, இறைவன் தோழன்போல அணியனாய் நின்று அருளுதல் இன்மையும் தானே பெறப்பட்டது. அதனால், அவை சகமார்க்கம் ஆகாமை அறிக. ``சிவனும்`` என்பதில் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது.இதனால், சிவயோகமே சிவனை அணியனாக்கும் சகமார்க்க மாதல் எதிர்மறை முகத்தால் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage