
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 10. சகமார்க்கம்
பதிகங்கள்

யோகமும் போகமும் யோகியர்க் காகுமால்
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர்
போகம் புவியிற் புருடார்த்த சித்திய
தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே.
English Meaning:
Yoga Confers Blessings of Here and HereafterBoth yoga and bhoga, yogis may have;
Through yoga is attained Siva`s Form divine;
Through bhoga all earthly blessings;
Thus may he enjoy both — he, Yogi immortal.
Tamil Meaning:
சிவயோகிகட்கு யோகத்தோடு உலக போகமும் சுத்தபோகமாய் வரும். சிவயோகத்தால் சிவசாரூபம் கிடைக்கும். ஆகவே, இம்மை, மறுமை இரண்டையும் இழவாது பெறும் சிவ யோகிக்கு அவன் உலகில் விரும்புகின்ற புருடார்த்தம் உளதாகும்.Special Remark:
இரண்டாம் அடியில், `யோகத்தால்` என உருபு விரிக்க. `உள்ளத்தின்கண் ஓர்கின்ற போகமாகிய புருடார்த்தம் சித்தியாகும்` என்க. அது, பகுதிப் பொருள்விகுதி.இதனால், சிவரூபம் உற்றிடுதல் பற்றிச் சிவயோகம் சக மார்க்கம் ஆதல் தெரித்துக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage