
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 10. சகமார்க்கம்
பதிகங்கள்

யோகச் சமாதியி னுள்ளே அகலிடம்
யோகச் சமாதியி னுள்ளே உளரொளி
யோகச் சமாதியி னுள்ளே உளள்சத்தி
யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.
English Meaning:
Fruits of Yoga SamadhiIn Yoga Samadhi is Space Infinite;
In Yoga Samadhi is Light Abiding;
In Yoga Samadhi is Sakti Omnipotent;
They that delight in Yoga Samadhi
Are verily Siddhas great.
Tamil Meaning:
சிவயோக சமாதியுள்ளே உலக முழுதும் அடங்கித் தோன்றும். உள்நிற்கும் ஒளியும் விளங்கும். அருட்சத்தியும் விளங்கு வாள். ஆதலால், சிவயோக சமாதி பெற்றவரே எல்லாம் சித்திக்கப் பெற்றவராவர்.Special Remark:
``இடம், ஒளி`` என்பவற்றின்பின், `விளங்கும்` என்பது எஞ்சி நின்றது. உளர்தல் - அசைதல்; ஒளிவிடல். இவ்வொளி திரோ தான சத்தியாம். `அகலிடமும், இவ்வொளியும் உள்ளன` என்றது, கால இடங்களைக் கடந்த பொருள்கள் விளங்குதல் கூறியதாம். அருட்சத்தி விளங்குதலாவது, சத்திநிபாதம் முதிர்தல்.இதனால், சிவயோகத்தால் உலகம் கடந்த வியாபகம் பெற்றுச் சிவனோடு ஒக்கும் நிலைவாய்த்தலால் அது சகமார்க்கமாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage