
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 10. சகமார்க்கம்
பதிகங்கள்

ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெட லாம்சக மார்க்கத்தே.
English Meaning:
Yoga Leads to Supreme AwarenessThrough this path of Sahamarga
The Yogis pierce the Adharas
And the Nadis they purify;
Envision the Kalas sixteen;
And glimpse their heavenly radiance;
And then are they merged in Awareness Supreme
Their organs of sense, internal and external
All atrophied.
Tamil Meaning:
சிவயோகத்தில் ஆறு ஆதாரங்களிலும் சிவனது நிலைகளையே காணுதலால் உணர்வை உண்டாக்கும் நாடிகள் நல்லனவாகும். மேதாகலை முதலிய பதினாறுகலைகளின் முடிவில் பர வெளியில் விளங்கும் ஒளியாகிய சிவம் தோன்றும். சீவ போதம் ஒடுங்கிப் பஞ்சேந்திரியங்கள், அந்தக்கரணம் இவையும் சீவத் தன்மை கெடச் சிவத்தன்மையைப் பெறும். அதனால், அவ்யோகம் சகமார்க்கம் ஆதற்குத் தடையில்லை.Special Remark:
சுத்திப்பட்டனவற்றை, ``சுத்தி`` என்றார். இதன்பின் `ஆம்` என்னும் பயனிலையும், ``விண்ணொளி`` என்பதன்பின், `தோன்றும்` என்னும் பயனிலையும் எஞ்சிநின்றன. `ஆலயம்` என்பதும் `ஒடுக்கம்` எனப்பொருள்தரும். சாதாரணம் - பொதுமை. ``சகமார்க்கத்தே`` என்பதனை, முதலில் வைத்து உரைக்க. `சகமார்க்கமே` என்பது பாடமன்று.இதனால், சிவயோகத்தின் பயன்கள் பலவும் கூறி, அது சகமார்க்கமாதல் விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage