
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 10. சகமார்க்கம்
பதிகங்கள்

சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது
மன்மார்க்கம் மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்
துன்மார்க்கம் ஞானத் துறுதியு மாமே.
English Meaning:
Sanmarga is SahamargaSanmarga is itself Sahamarga
So by itself it leads to Supreme Mukti;
Other Yogas
Involve myriad birth and death
Will they level to Jnana?
Tamil Meaning:
சிவநெறியில் யோகத்தை, `சகமார்க்கம்` - ஒத்துடன் நிற்கும் தோழமை நெறி - எனக் கூறுதல், சன்மார்க்கமாகிய ஞானத்தின் தன்மையையே கொண்டு விளங்குதல் பற்றியாம். அதனால், சிவநெறியோகம், உண்மை ஞானத்தால் உளதாகின்ற முத்திப் பேற்றுள் உய்க்கும். ஏனையோர் கூறும் யோகங்கள் ஓயாது பிறந்து இறத்தலை வெறாது விரும்பிக் கொள்வனவேயாகும். அவற்றால் ஞானமாகிய உறுதிப் பொருள் கிடைத்தலும் கூடுமோ!Special Remark:
சிவமாந்தன்மையைப் பெறுதற்கு அணித்தாம் நிலையை எய்துவித்தல் பற்றியே யோகம், `சகமார்க்கம் தோழமை நெறி` எனப்படுகின்றது என்பதும், அதனால், அந்நிலையை எய்து விக்கமாட்டாத பிற யோகங்கள் `சகமார்க்கம்` என்பதற்குப் பொரு ளாகா என்பதும் கூறியவாறு. எனவே, பிற யோகங்களைச் சிவ நூல்கள் யோகமாகச் கொள்ளுதல் இல்லை என்பது பெறப்பட்டது. யோகத்திலும் ஞானத்தன்மையே உளதாதல், ஆதார பங்கயங்களை ஆறு அத்துவாக்களாகவும், நிராதார சத்தி மண்டலம் கொள்ளப்படுத லும் அதற்கும் மேலான மீதானம் கூறப்படுதலும் பிறவுமாம். இவை அடயோகம், பாதஞ்சலி யோகம் முதலியவற்றில் இல்லாமை அறிக.``சன்மார்க்க ஞானமதின் பொருளும், வீறு
சமயசங்கே தப்பொருளுந் தான்ஒன் றாகப்
பன்மார்க்க நெறியினிலும் கண்ட தில்லை`` 1
என்றார் தாயுமான அடிகளும்.
``மெய்ம்மைச் - சிவயோக மேயோகம்; அல்லாத எல்லாம்
அவயோகம் என்றே அறி`` 1
என்ற திருக்களிற்றுப்படி இங்கு நினைக்கத் தக்கது. ``பிறந்து, இறந்து உன்மார்க்கம்`` என்றது, `பிறந்து இறந்து உழன்றும் அதனையே விரும்புகின்ற மார்க்கமாம்` என்றவாறு. எனவே, அவை மல நடையே யாய் பிறவியை அறுக்கமாட்டா என்பது போந்தது. `ஆனது` என்றது, பிறவற்றுள் ஒவ்வொன்றையும் தனித்தனி நோக்கிற்று. ``இறந்தும்`` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `அதனையே உன்னும் மார்க்கமாம்` என்க. ``உறுதியும்`` என்னும் உம்மை சிறப்பு. ``ஆமே`` என்பது எதிர்மறைப் பொருட்டு.
இதனால், சிவயோகத்தது சிறப்புக் கூறும் முகத்தால், அது `சகமார்க்கம்` எனப்படுதற்கு ஏது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage