
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 13. அநுக்கிரகம்
பதிகங்கள்

உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி மாபோதமாமே.
English Meaning:
He is One with the infinite space of the seven worldsAnd yet transcends it.
He cannot be indicated as this or that
He Himself becomes the various jivas
And helps them to go upwards
And remains the Supreme leader of the world.
Tamil Meaning:
ஆன்ம அறிவினுள் நிற்கின்ற அறிவாயும், ஆன்ம அறிவின்வழி உடலை இயக்குதலின் உடலாயும், தேவர்களும் விரும்பி அடையும் இன்பப் பொருளாயும், `மண்ணுலகத்தேவர்` (பூசுரர்) என்று சொல்லப்படுகின்ற அந்தணர்கள் வேதம் முதலிய வற்றால் புகழ்கின்ற அருட்கோலத்தை உடையவனாயும் உள்ள சிவபெருமானே, கண்ணில் உள்ள கருமணி, உடல் செல்லுதற்குரிய நன்னெறியைக் காட்டுதல்போல, உயிர் செல்லுதற்குரிய ஞான நெறியைக் காட்டுகின்ற பேராசிரியனாய் வருவன்.Special Remark:
`அவ்வாறு வந்து ஞானத்தை அருளுதலே அநுக்கிரகம் எனப்படுவது` என்பது குறிப்பெச்சம். `போதகன்` என்பது குறைந்து நின்றது. இனி, `ஆம்` என்பதனைச் சொல்லெச்சமாகக் குறைத்து `மாபோதகனே` என்றும் பாடம் ஓதுப.இதனால், அநுக்கிரகமாவது, இது என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage