
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- விநாயகர் வணக்கம்
- முதல் தந்திரம் - பாயிரம்
- முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
- முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு
- முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு
- முதல் தந்திரம் - 4. உபதேசம்
- முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
- முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை
- முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை
- முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை
- முதல் தந்திரம் - 9. கொல்லாமை
- முதல் தந்திரம் - 10. புலால் மறுத்தல்
- முதல் தந்திரம் - 11. பிறன்மனை நயவாமை
- முதல் தந்திரம் - 12. மகளிர் இழிவு
- முதல் தந்திரம் - 13. நல்குரவு
- முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்
- முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்
- முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை
- முதல் தந்திரம் - 17. வானச் சிறப்பு
- முதல் தந்திரம் - 18. தானச் சிறப்பு
- முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்
- முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்
- முதல் தந்திரம் - 21. அன்புடைமை
- முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்
- முதல் தந்திரம் - 23. கல்வி
- முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்
- முதல் தந்திரம் - 25. கல்லாமை
- முதல் தந்திரம் - 26. நடுவு நிலைமை
- முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை
Paadal
-
1. வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.
-
2. வேதம் உரைத்தானும் வேதிய னாகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்கா
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.
-
3. இருக்குரு வாம்எழில் வேதத்தி னுள்ளே
உருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குரு வாகிய வேதியர் சொல்லுங்
கருக்குரு வாய்நின்ற கண்ணனு மாமே.
-
4. திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.
-
5. ஆறங்க மாய்வரு மம்மறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய் தப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.
-
6. பாட்டும் ஒலியும் பரகுங் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென் றிகலுற் றாரே.